FD : ஒரு ஆண்டுக்கான எஃப்டி திட்டம்.. அதிக வட்டி தரும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
Best Interest Rate for One Year FD Schemes | பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு திட்டம் தான் நிலையான வைப்பு நிதி. இந்த நிலையில், 1 ஆண்டுக்கான எஃப்டி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
மனிதர்களின் வாழ்வில் நிலையான பொருளாதாரம் (Economy) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. காரணம் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியாமல் போய்விடும். இதன் காரணமாக, பெரும்பாலான பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவ்வாறு தங்களது பொருளாதாரத்தை பாதுகாக்க பொதுமக்கள் தேர்வு செய்யும் மிக முக்கிய திட்டமாக உள்ளது தான் நிலையான வைப்பு நிதி. இந்த நிலையில், ரெப்போ வட்டி (Repo Rate) விகிதம் குறைக்கப்பட்டு இருந்தாலும் எஃப்டி (FD – Fixed Deposit) திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிக வட்டியுடன் கூடிய ஒரு ஆண்டுக்கான எஃப்டி திட்டங்கள்
பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அதிக வட்டியுடன் கூடிய ஒரு ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
எச்டிஎஃப்சி வங்கி
எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) தனது ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.




இதையும் படிங்க : அரசுக்கு வட்டிக்கு பணத்தை கொடுத்து லாபம் பெறலாம்.. எப்பட.. முழு விவரம் இதோ!
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) தனது ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே இரண்டு மற்றும் அதற்கும் அதிகமான ஆண்டுகள் கால அளவீடு கொண்ட திட்டங்களுக்கு 6.6 சதவீதம் முதல் 7.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) தனது ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஃபெடரல் வங்கி
ஃபெடரல் வங்கி (Federal Bank) தனது ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : Gold Price : கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை.. மேலும் குறையுமா?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் (State Bank of India) இந்தியா தனது ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.