Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“வேலியே பயிரை மேய்ந்த கதை”..பெண்ணுக்கு அத்துமீறி பாலியல் தொல்லை…முதல் நிலை காவலர் கைது!

Kallakurichi Policeman Arrested: கள்ளக்குறிச்சியில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முதல் நிலை காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவிட்டுள்ளார் .

“வேலியே பயிரை மேய்ந்த கதை”..பெண்ணுக்கு அத்துமீறி பாலியல் தொல்லை…முதல் நிலை காவலர் கைது!
பாலியல் புகாரில் போலீஸ்காரர் கைது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Jan 2026 10:32 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது பெண். இவரது, கணவர் வெளிநாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், மேற்கண்ட 32 வயது பெண் சில கோரிக்கைகள் தொடர்பாக சிலருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வரும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாளையம் குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் மகன் ஷேக் சலீம் (வயது 36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு நண்பர்களாக பேசி பழகி வந்தனராம். இந்த நிலையில், காவலர் ஷேக் சலீம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென அந்த பெண்ணிடம் காவலர் ஷேக் சலீம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். உடனே, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பாலியல் புகாரில் போலீஸ்காரர் கைது

பின்னர், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன் பேரில், முதல் நிலை காவலர் ஷேக் சலீம் மீது பாலியல் தொல்லை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அந்த பெண்ணுக்கு காவலர் ஷேக் சலீம் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல் நிலை காவலர் ஷேக் சலீமை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: நகை கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடையா? தமிழ்நாடு ஃபேக்ட் செக் சொன்ன விளக்கம் என்ன?

முதல் நிலை காவலர் சஸ்பெண்ட்

இதனிடையே, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முதல் நிலை காவலர் ஷேக் சலீமை சஸ்பெண்ட் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பொது மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்தவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலியை பயிரை மேய்ந்த கதை போல…

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், சாதாரண பொதுமக்கள் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது, காவல் துறையை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருவதும், அவர்கள் கைதாவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவமானது வேலியை பயிரை மேய்ந்த கதை போல ஆகிவிட்டது.

மேலும் படிக்க: சாலையில் சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!