Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நகை கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடையா? தமிழ்நாடு ஃபேக்ட் செக் சொன்ன விளக்கம் என்ன?,

Tamil Nadu Fact Check: தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இது தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட நடைமுறை என தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என தமிழ்நாடு ஃபேக்ட் செக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நகை கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடையா? தமிழ்நாடு ஃபேக்ட் செக் சொன்ன விளக்கம் என்ன?,
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Jan 2026 07:31 AM IST

சென்னை, ஜனவரி 13, 2026: தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த தகவல் தமிழ்நாட்டைச் சார்ந்தது அல்ல என்றும், வேறு மாநிலத்தில் நடந்த சம்பவம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், நகைக்கடைகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளை மற்றும் மோசடி சம்பவங்களை கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் உள்ளூர் பிரிவு இந்த முடிவை எடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, முகத்தை மறைக்கும் வகையில் முக்காடு, முகமூடி, ஹிஜாப் அல்லது தலைக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்யக்கூடாது என அந்த சங்கம் உத்தரவிட்டுள்ளது.

நகை கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை:

இதுகுறித்து உத்தரப்பிரதேச நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கமல் சிங் கூறுகையில், “முகத்தை மறைத்துக் கொண்டு வருபவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாததால், பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனால், முகம் முழுவதும் மூடிய நிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்யமாட்டோம். இதுகுறித்து எங்கள் கடைகளின் முன்பாக சுவரொட்டிகளும் ஒட்டியுள்ளோம்,” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: மாணவர்களே..! விட்டாச்சு லீவு.. 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அரசு அறிவிப்பு..

உ.பி நகை கடை உரிமையாளர்கள் சொல்வது என்ன?

ஜான்சி உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களிலும், வாரணாசியில் உள்ள ஆயிரக்கணக்கான நகைக்கடைகளிலும் இதே போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது எந்த ஒரு மதத்தையும் எதிர்க்கும் நடவடிக்கை அல்ல, நகைக்கடைக்காரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு மட்டுமே என்றும் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் ஹிஜாப் அணிந்து வரலாம்; ஆனால், கடைக்குள் நுழைவதற்கு முன் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அதை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்…களமிறங்கிய சிறப்பு குழு- புகார் எண்கள் அறிவிப்பு!

லோஹ்தா பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ஷாஹித், பர்தா அணிந்த வாடிக்கையாளர்களுக்கு நுழைவு மறுப்பது தவறு என்று கூறினார் . அத்தகைய மறுப்பு வாடிக்கையாளர்களை விரட்டிவிடும். பர்தா அணிந்த ஒரு பெண்ணை அதை கழற்றச் சொல்வது அவமானகரமானதாக இருக்கும்.

தமிழ்நாடு ஃபேக்ட் செக் சொன்ன விளக்கம்:


இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இது தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட நடைமுறை என தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இதனை மறுக்கும் வகையில், தமிழ்நாடு ஃபேக்ட் செக் (Fact Check) தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், இந்த நடைமுறை தமிழ்நாட்டில் அல்ல, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளதாகவும், தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.