Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்!!

Rain today: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் முதல் தென் மாவட்டங்கள் வரை இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அதேசமயம் சென்னையில் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்!!
கோப்புப் படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Dec 2025 06:36 AM IST

சென்னை, டிசம்பர் 08: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று (டிசம்பர் 7) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இனி வரும் நாட்களில் மழை அளவு கணிசமாகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், இன்று தென் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : முன்பகை காரணமாக கட்டையால் தாக்கிய மாணவர்கள் – பிளஸ் 2 மாணவர் பரிதாப மரணம் – அதிர்ச்சி தகவல்

தித்வா புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம் டெல்டா, தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பொழிவு இருந்தது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால், தொடர்ந்து அடுத்த மழைப்பொழிவு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் இன்று முதல் 11ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளி் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. 10ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும், 11ம் தேதியில் தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும்.

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

அதேசமயம், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் முதல் தென் மாவட்டங்கள் வரை இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : டியூஷனுக்கு சென்ற 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்.. அதிர்ச்சி சம்பவம்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் 1-2 நிமிடங்களுக்கு லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதைத்தவிர்த்து பெரும் மழை வாய்ப்பு எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.