Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தி கிரேட் இந்தியன் கிட்சென் படத்தில் நடித்த அனுபவம் இதுதான் – ஓபனாக பேசிய நடிகை நிமிஷா சஜயன்

Actress Nimisha Sajayan: மலையாள சினிமாவில் நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் சுராஜ் வெஞ்சரமுடு நடிப்பில் வெளியான தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்சியம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை நிமிஷா சஜயன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் படம் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

தி கிரேட் இந்தியன் கிட்சென் படத்தில் நடித்த அனுபவம் இதுதான் – ஓபனாக பேசிய நடிகை நிமிஷா சஜயன்
நடிகை நிமிஷா சஜயன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2025 13:07 PM

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை நிமிஷா சஜயன் தற்போது தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக நடிகை நிமிஷா சஜயன் தமிழில் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்த சித்தா படத்தில் நாயகியாம அறிமுகம் ஆனார். இந்த சித்தா படம் நடிகை நிமிஷா சஜயன் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனப் படம் ஆகும். இதனைத் தொடர்ந்துட் தற்போது இரண்டாவதாக நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் படம் தமிழில் வெளியாகியுள்ளது. நடிகர் அதர்வா நாயகனாக நடித்த இந்தப் டிஎன்ஏ படத்தில் நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார். படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது தி கிரேட் இந்தியன் கிட்சென். இந்தப் படம் குறித்தும் அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நடிகை நிமிஷா சஜயன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

தி கிரேட் இந்தியன் கிட்சென் குறித்து நிமிஷா சஜயன் பேசியது:

நடிகை நிமிஷா சஜயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தி கிரேட் இந்தியன் கிட்சென் படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் போல எனது சொந்த வாழ்க்கையில் எனக்கு எந்த நிகழ்வும் நடந்தது இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் அந்த கதாப்பாத்திரம் போல பல பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படு வருகிறார்கள். அவர்களின் சூழ்நிலையை மனதில் கொண்டுதான் அந்தப் படத்தை நடித்து முடித்தேன் என்று தெரிவித்து இருந்தார்.

தி கிரேட் இந்தியன் கிட்சென் படத்தை இயக்குநர் ஜோ பேபி எழுதி இயக்கி உள்ளார். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும் இந்தப் படம் நிமிஷா சஜயனை பான் இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது என்பதே உண்மை.

நடிகை நிமிஷா சஜயனின் போட்டோ ஷூட்:

மலையாள சினிமாவில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தை தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் ரீமேக் செய்தன. இதில் தமிழில் மலையாளத்தில் வைத்த அதே பெயரில் தி கிரேட் இந்தியன் கிட்சென் என்ற தலைப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்து இருந்தார்.

அதே நேரத்தில் இந்தி சினிமாவில் மிர்சஸ் என்ற பெயரில் இந்தப் படத்தை ரீமேக் செய்து இருந்தனர். இதில் நடிகை சான்யா மல்கோத்ரா நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரீமேக் படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.