தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாத குபேரா – இயக்குநர் சேகர் கம்முலா சொன்ன விசயம்
Director Shekhar Kammula: நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகி பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாரான இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் சேகர் கம்முலா (Director Sekhar Kammula). இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியான பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் இறுதியாக நடிகர் தனுஷை வைத்து குபேரா என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவானது. இந்தப் படத்தை பான் இந்திய மொழிகளில் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மிகவும் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் இதுவரை தனுஷ் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரமான பிச்சைக்காரன் வேடத்தில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்து இருந்தார். இதன் காரணமாகவே தமிழ் ரசிகர்களிடையே குபேரா படம் மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழ் மொழியைத் தவிற மற்ற மொழிகளில் குபேரா படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பாஸ் ஆபிஸ் வசூலைப் பொருத்தவரை மற்ற மொழிகளை விட தமிழ் மொழியில் குறைவான வசூலைப் பெற்றது. இது குபேரா படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.




குபேரா படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The audience can’t get enough of #Kuberaa 🔥
1.5 million+ tickets sold on BMS… and it’s only going stronger! ❤️🔥
Book your tickets now: https://t.co/4LlzXfPwzT #BlockBusterKuberaa #BOXOFFICEKuberaa#SekharKammulasKuberaa pic.twitter.com/TWOTxm9zpC
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 29, 2025
தமிழில் வரவேற்பைப் பெறாத குபேரா படம்:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட குபேரா படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா பேசுகையில், தெலுங்கு சினிமாவைப் பொருத்தவரை இந்த குபேரா படத்திற்கு நான் எதிர்பார்க்காத வரவேற்பு கிடைத்து வருகின்றது. தமிழ் நாட்டை தாண்டி மற்ற நாடுகளில் வாழும் தமிழ் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் தமிழ் நாட்டில் ரசிகர்களின் பேச்சிற்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது. வாய்மொழி வார்த்தையாக ரசிகர்கள் படத்தை கொண்டாடுவதாக தெரிவித்தாலும் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது என்று இயகுநர் சேகர் கம்முலா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷின் நடிப்பைக் கண்டு பிரம்மித்துபோனேன். மேலும் நடிகர் தனுஷின் நடிப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும் நினைத்தேன். இதுபோன்ற கதைகள் அடிக்கடி வருவது இல்லை அதனால் படம் வரவேற்பைப் பெரும் என்று நான் நினைத்தேன் என்றும் சேகர் கம்முலா தெரிவித்து இருந்தார்.