AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 46 படத்தின் கதை முதலில் இதுதான் – இயக்குநர் வெங்கி அட்லூரி ஓபன் டாக்!

Director Venky Atluri: நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது அவரது 45-வது மற்றும் 46-வது படங்களில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சூர்யாவின் 46-வது படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யா 46 படத்தின் கதை முதலில் இதுதான் – இயக்குநர் வெங்கி அட்லூரி ஓபன் டாக்!
வெங்கி அட்லூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2025 16:18 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் இயக்குநர் வெங்கி அட்லூரி (Director Venky Atluri). இவர் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவராக வலம் வருகிறார். இவர் முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை வாத்தி, சார் என்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் எடுத்து வெளியிட்டனர். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானார் வெங்கி அட்லூரி. இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ் நடிகரை வைத்து படம் இயக்குவது குறித்து வெங்கி அட்லூரி அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்தது.

அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி நடிகர் சூர்யாவை வைத்து படக் இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். வாத்தி படத்தில் இருந்து தொடர்ந்து வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் மூலம் இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 56 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

சூர்யா 46 படத்தின் கதை முன்பு இதுதான்:

இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சூர்யாவின் 46-வது படத்தை பிரபல அரசியல் தலைவர் சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்க வேண்டும் என்றே முடிவு செய்து இருந்ததாக கூறியுள்ளார். பின்பு அதனை மாற்றக் காரணம் முன்பு சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் என இரண்டு படங்களும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்.

அதன் காரணமாகவே படத்தின் கதையை மாற்றி முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்டாக எடுக்க முடிவு செய்தகாவும் இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவின் குடும்ப செண்டிமெண்ட் படத்தைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us