நடிகர் ஜெய்யின் சட்டென்று மாறுது வானிலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
Actor Jai: தமிழ் சினிமாவில் மக்களுக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெய். இவர் பெரும்பாளும் காமெடி காதல் படங்களிலேயே நடித்து வரும் நிலையில் தற்போது சட்டென்று மாறுது வானிலை படத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் இருந்தாலும் தங்களது நடிப்பில் மூலம் தங்களுக்கென ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களும் உள்ளனர். அப்படி ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர் தான் ஜெய் (Actor Jai). இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு என தனி ரசிகர்கள் உள்ள்னர். நடிகர் ஜெய் இதுவரை பெரும்பாளான படங்கள் காதல் காமெடியை மையமாக வைத்தே நடித்துள்ளார். இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாக உள்ள புதுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு சட்டென்று மாறுது வானிலை (Sattendru Maarudhu Vaanilai) என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் பெயரில் அத்தனை ரொமாண்டிக் இருந்தாலும் படத்தின் போஸ்டரில் நடிகர் ஜெய்யை இரண்டு பக்கமும் இருந்து போலீஸார் அடிப்பது போன்று போஸ்டர் உள்ளது.
இந்தப் போஸ்டருக்கும் படத்தின் பெயருக்கும் சுத்தமாக ஒற்றுமை இல்லை. இதனால் படம் நிச்சயமாக வித்யாசமாக இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் ஜெய்யின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் பாபு விஜய் இயக்குகிறார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




சட்டென்று மாறுது வானிலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு:
Brace for impact. Here’s the fierce first look of #SattendruMaruthuVanilai – If they attack, we shall fight to the end. 🔥@Actor_Jai@BabuVijayB@BVFrames@MeenakshiGovin2@iYogiBabu@Richardmnathan@iamSandy_Off@ggirishh@ungaldevaoffl@shreyaghoshal@ramraju63066957 pic.twitter.com/PKcOB5yW2w
— BV Frames (@BVFrames) June 30, 2025
இந்தப் படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடிகர்கள் மீனாட்சி கோவிந்த ராஜன், யோகி பாபு, கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிவி ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குநர் பாபு விஜய் தான் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி சென்னை, நெல்லூர் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என்றும் படக்குழு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றது குறிப்பிடத்தக்கது.