Hi Movie: நயன்தாராவின் ஹாய் பட கதை இதுதான்.. அஜித் – ஷாலினியை குறிப்பிட்டு சொன்ன இயக்குநர்!
Hi Movie Plot Update: நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் ராஜ் இணைந்து நடித்துவரும் புதிய திரைப்படம்தான் ஹாய். இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு இடவன் இயக்கும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் பேசியிருந்த விஷ்ணு இடவன், ஹாய் படத்தின் மைய கதை பற்றி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்துவருபவர் நடிகை நயன்தாரா (Nayanthara). 40 வயதை கடந்தும் தற்போதும் படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திவருகிறார். அந்த விதத்தில் இவர் தமிழில் கவினுக்கு (Kavin) ஜோடியாக நடித்துவரும் காதல் கதைக்களம் கொண்ட படம்தான் ஹாய் (Hi). இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு இடவன் (Vishnu Edavan) இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் நிலையில், ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இவர் கவின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஹாய் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளானது தொடங்கியுள்ளது.
இப்படத்தினை படக்குழு விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், இதன் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கவுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இயக்குநர் விஷ்ணு இடவன் பேசியுள்ளார். அதில் அவர் ஹாய் படத்தின் கதை குறித்து மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: ‘இந்த தருணத்தை அடைய எனக்கு 7 ஆண்டுகள் ஆனது’ – ராமாயணா படம் குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி பேச்சு!
ஹாய் திரைப்படத்தின் கதை குறித்து இயக்குநர் விஷ்ணு இடவன் சொன்ன விஷயம் :
அந்த பத்திரிகை பேட்டியில் விஷ்ணு இடவன், “எல்லா ஆண்களும் ஷாலினி போன்ற ஒரு பெண்ணை விரும்பலாம். ஆனால் அதற்கு, அவர்கள் அஜித்குமார் போல இருக்க வேண்டும் இதுதான் படத்தின் மைய கதை. இப்படத்தின் கதை ஒரு நிறுவனத்தில் நல்ல பதவியில் பணிபுரியும் ஹீரோ திருமணம் செய்துகொள்ள முடிவு செய்வதைப் பற்றியும், அவன் தனக்கு மனைவியாக எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கிறான். மேலும் அந்த பெண்ணை தகுதியானவனாக தன்னை எப்படித் தயார்படுத்திக் கொள்கிறான் என்பதைச் சுற்றியே இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது என அகில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசன் படம் சூப்பராக வந்துருக்கு – அப்டேட் கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார்!
ஹாய் படம் பற்ற இயக்குநர் விஷ்ணு இடவன் சொன்னது குறித்து வைரலாகும் பதிவு:
Director Vishnu Edavan (Recent):
– All men may wish for a woman like #Shalini. But for that, they must be like #AjithKumar. — this is the one-line of the story.
– The story is about a protagonist who works in a good position at a company and decides to get married. He chooses… pic.twitter.com/5LWt3ubAyE
— Movie Tamil (@_MovieTamil) April 2, 2026
இந்த ஹாய் திரைப்படமானது மிகவும் வித்தியாசமான காதல் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இதில் நயன்தாரா, கவின், ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குரேஷி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த் படத்தை வரும் 2026 ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.