AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

90ஸ் காதல் நினைவுகளை மீண்டும் கொண்டுவரும் ‘Notebook 90s – Kadhal Flashback’!

90-களின் பள்ளிப் பருவம், முதல் காதல், வெட்கம் கலந்த பார்வைகள் என மறக்க முடியாத இனிமையான நினைவுகளை மீண்டும் கொண்டுவரும் வகையில், Sony VIZHA புதிய தொடரான ‘Notebook 90s – Kadhal Flashback’ ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடர் நவம்பர் 23, 2026 முதல் மாலை 7.30 மணிக்கு Sony VIZHA தொலைக்காட்சியிலும், Sony LIV ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாகிறது.

90ஸ் காதல் நினைவுகளை மீண்டும் கொண்டுவரும் ‘Notebook 90s – Kadhal Flashback’!
பாவனா நடிக்கும் தொடர்
C Murugadoss
C Murugadoss | Published: 02 Nov 2026 14:01 PM IST

1990-களின் திருச்சியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடரில் கௌதம் கதாபாத்திரத்தில் முஷமில், காயத்ரி கதாபாத்திரத்தில் யுவா ஆகியோர் நடித்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் ஒரு விளையாட்டுத்தனமான குறும்பில் தொடங்கும் இவர்களது நட்பு, நாளடைவில் முதல் காதலாக மாறுகிறது. ஒருவரைப் பார்ப்பதற்காக வகுப்பறையில் காத்திருப்பது, எதிர்பாராத சந்திப்புகள், வெட்கம் கலந்த பார்வைகள், மனதில் இருக்கும் காதலைச் சொல்லத் தயங்குவது என 90களின் காதல் அனுபவங்களை இந்தத் தொடர் மையமாகக் கொண்டுள்ளது. முதல் காதல் தரும் மகிழ்ச்சி, காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு, புரிதல் இல்லாத தருணங்கள், மனதை வலிக்கும் பிரிவுகள் என இளமைப் பருவத்தில் ஏற்படும் பல்வேறு உணர்வுகளையும் இந்தத் தொடர் எடுத்துக்காட்டுகிறது.

மேலும், வயதான காயத்ரி கதாபாத்திரத்தில் நடிகை பாவனா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதன் மூலம் கடந்த கால காதல் நினைவுகளையும் தற்போதைய வாழ்க்கையையும் இணைக்கும் வகையில் கதை நகர்கிறது.

90ஸ் நினைவுகள் குறித்து இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர்!

இந்தத் தொடர் குறித்து பேசிய இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர், Sony VIZHA மற்றும் Sony LIV உடன் இணைந்து ‘Notebook 90s – Kadhal Flashback’ தொடரை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் நெருக்கமான ஒரு காலகட்டத்தை மீண்டும் நினைவுகூர விரும்பியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், 90களில் நட்பு, குடும்பம் மற்றும் உறவுகளுக்கு தனி அழகு இருந்ததாகவும், அந்தக் காலத்தின் நினைவுகளையும் வாழ்க்கையை அழகாக்கிய சிறிய தருணங்களையும் இந்தத் தொடர் மீண்டும் நினைவுபடுத்தும் என்றும் கூறியுள்ளார்.

வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Sony Vizha (@sony.vizha)

இந்தத் தொடரைப் பார்க்கும் ஒருவர் தனது பழைய நண்பரை நினைத்துப் பார்த்தாலோ அல்லது பழைய நினைவுகளைப் புன்னகையுடன் நினைவுகூர்ந்தாலோ அதுவே தனக்குப் பெரிய மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் படைப்பாக்கத்தில் உருவாகும் இந்தத் தொடரை சதாசிவம் இயக்கியுள்ளார். நீலன் இதற்கான கதையை எழுதியுள்ளார்.

பள்ளிப் பருவ நட்பு, முதல் காதல், இளமைப் பருவ உணர்வுகள் என 90களின் வாழ்க்கை முறையையும் எளிமையான காதல் அனுபவங்களையும் மீண்டும் திரையில் கொண்டுவருகிறது ‘Notebook 90s – Kadhal Flashback’.

Follow Us