AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக காங்கிரஸ் இடையே நீடிக்கும் கருத்து வேறுபாடு.. டெல்லி செல்லும் செல்வப்பெருந்தகை..

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், காங்கிரஸுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி கிட்டத்தட்ட 50 இடங்கள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக காங்கிரஸ் இடையே நீடிக்கும் கருத்து வேறுபாடு.. டெல்லி செல்லும் செல்வப்பெருந்தகை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Feb 2026 15:17 PM IST

சென்னை, பிப்ரவரி 16, 2026: காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓர் ஆண்டு மாதங்கள் உள்ளன. இரண்டாவது வார சூழலில் அடுத்த மாதம் அதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் அதிமுக தரப்பிலும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், தற்போது வரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய முஸ்லிம் லீக், கொங்குநாடு தமிழ் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.

காங்கிரஸ் திமுக இடையே இருக்கும் கருத்து வேறுபாடு:

இருப்பினும் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில் இந்த முறை எப்போதும் இல்லாத வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க திட்டமிட்டுள்ளனர். அதே சமயம் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், காங்கிரஸுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி கிட்டத்தட்ட 50 இடங்கள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸிற்கு அனுப்பப்பட்ட தீர்மானம்:

மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தயார் நிலையில் இடைக்கால பட்ஜெட்… சட்டப்பேரவையில் முன்னேற்பாடுகள்… அமைச்சர்கள் ஆய்வு!

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டாக அகில இந்திய தலைமைக்கு இந்த கோரிக்கைகளை முன்வைத்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். முக்கியமாக ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், பேரிய முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை பதவிகள், உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க வகையில் இடஒதுக்கீடு போன்றவை வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்:

இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க உள்ளதாகவும், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: நீதிபதி மீது அரிவாள் வீச்சு.. நூலிழையில் உயிர் தப்பினார்.. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி தரப்பில் கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது பொதுவெளியில் வெளிப்படுகின்றன.

காங்கிரஸ் தரப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கப்படும் சூழலில், திமுக தரப்பில் இதற்கு தெளிவான மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுமா? அல்லது காங்கிரஸ் எடுக்கப் போகும் முடிவு என்ன? என்பது அரசியல் முக்கியத்துவம் பெற்ற கேள்வியாகியுள்ளது.

Follow Us