AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி – முதல்வர் அறிவிப்பு

விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது கம்யூனிச கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி – முதல்வர் அறிவிப்பு
நல்லகண்ணு - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Feb 2026 21:08 PM IST

சென்னை, பிப்ரவரி 25 : விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 25, 2026 அன்று மதியம் 1.55 மணியளவில் காலமானார். அவரது மறைவு அரசியல் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், எனக்கு ஒரு கண்ணில் சரிவர பார்வை இல்லை என்றாலும், அகத்தில் இன்னொரு கண் இருக்கிறது. அது தான் நல்லகண்ணு என்று கலைஞர் கருணாநிதியின் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவுற்றார் என்ற செய்தி கடும் துயரத்துக்கு ஆளாக்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : சுதந்திர போராட்டம் முதல் கடைசி காலம் வரை.. நல்லகண்ணு கடந்து வந்த பாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு

 

மேலும், நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி அவர். நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தினர் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாக பெருஞ்சீலர். சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் கொள்கை உறுதி குலையாமல் குன்றென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தோழர் நல்லகண்ணு. கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர். கருணாநிதியுடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர் பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில் கலைஞர் கருணாநிதியுடன் தோளோடு தோளாக நின்று களமாடியவர் என்றார்.

அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

தான் வேறு இயக்கம் என்று பிரித்து பார்க்காமல் இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர் என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது. தோழரின் நினைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அழைவருக்கும் என ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்.

இதையும் படிக்க : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டு சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும். பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லா நல்லகண்ணுவின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பிவைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us