Yogi Babu: ஒரே படத்தில் 10 வேடம்.. யோகி பாபு நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு இதோ!
Yogi Babu New Movie: தென்னிந்திய சினிமாவில் நகைச்சுவை நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருப்பவர் யோகி பாபு. இவர் கதாநாயகனாக திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில், இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்காத வேடத்தில் நடித்துவந்தவர் யோகி பாபு (Yogi Babu). இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற சினிமாவில் (South Cinema) பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்துவருகிறார். இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தற்போது படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் மண்டேலா (Mandela), கெணத்த காணோம் மற்றும் கோலமாவு கோகிலா (Kolamavu Kokila) போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதிலும் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில், நடிகை நயன்தாராவிற்க்கே (Nayanthara) ஜோடியாக இவர் நடித்திருந்தார். அந்த வரிசையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கெணத்த காணோம். இப்படமானது வெளியாகி இவருக்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.
மேலும் இவர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலும் நடிக்கிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் (Kishore Kumar) இயக்கத்தில், புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: இளையராஜாவுடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு.. தனது புதிய படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு!
யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து வைரலாகும் பதிவு:
#9Lights Productions’ Production No 01, Starring #YogiBabu in 10 Different avatars.. Shooting commencing soon..🤝 pic.twitter.com/pUh1N8p671
— Laxmi Kanth (@iammoviebuff007) May 22, 2026
ஒரே திரைப்படத்தில் 10 வேடங்களில் நடிக்கும் யோகி பாபு:
நடிகர் யோகிபாபு இதுவரைக்கும் கிட்டத்தட்ட 170 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் அட்லீ இயக்கும் ராக்கா படத்திலும் இவர் நகைச்சுவை நாயகனாக நடிக்கிறார். மேலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 போன்ற பிரம்மாண்ட படங்களில் இவர் நடித்துவருகிறார். அந்த வகையில் தற்போது அறிமுக இயக்குநர் கிராஷ் குமார் இயக்கத்தில், ப்ரொடக்ஷன் 1 என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: போடடுடா தம்பி பிரேக்-அ.. கைபுள்ளையை ரீகிரியேட் செய்த மாகாபா – வைரலாகும் வீடியோ!
இந்த ஒரே படத்தில் யோகிபாபு கிட்டத்தட்ட 10 வேடங்களில் நடிக்கிறாராம். அரசியல், ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் இப்படம் தயாராகவுள்ளதாம். இதில் யோகி பாபுவுடன் நடிகர்கள் ரெட்டின் கிங்ஸ்லீ மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடிக்கவுள்ளார்களாம். தற்போது இப்படம் குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதகவும், மற்ற நடிகர்கள் யார் யார் என விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை 2026ம் ஆண்டு இறுதி அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது.