நானியின் தி பாரடைஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா? படக்குழு வெளியிட்ட அப்டேட்
The Paradise Movie Box Office Collection | நடிகர் நானியின் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது தி பாரடைஸ் படம். உலக அளவில் இந்தப் படம் இரண்டு நாட்களில் எத்தனை கோடி ரூபாய் வசூலித்து உள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர் நானியின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தாலும் அந்தப் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் நானியின் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரானது தி பாரடைஸ் படம். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 24-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
பீடியட் ஆக்ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தில் நடிகர் நானி உடன் இணைந்து நடிகர்கள் மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு, ஈஸ்வரி ராவ், தனிகெள பரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, பிரியதர்ஷி புலிகொண்டா, பி. விஜய் குமார், ராஜா ரவீந்திரன், சத்ய பிரகாஷ், ராம் ஜெகன், எம்.எஸ். சௌத்ரி, துவவாசி மோகன், அசோக் குமார், கீதா பாஸ்கர், சத்யராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து உள்ளனர்.




நானியின் தி பாரடைஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?
இந்த தி பாரடைஸ் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து பெரிய அளவில் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறவில்லை. மாறாக பல ட்ரோல்களையே சந்தித்து வருகின்றது. மேலும் இந்த ட்ரோல்கள் குறித்தும் நடிகர் நானி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பாசிட்டிவாக பேசி இருந்தார். மேலும் இந்தப் படம் இப்படியான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூபார்ய் 114 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… வெளியானது ரன்பீர் கபூரின் லவ் அண்ட் வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It is JADAL ZAMANA & we are witnessing its RAMPAGE 🔥🔥#TheParadise collects 114 CRORES+ GROSS WORLDWIDE in 2 days ❤🔥❤🔥
Book your tickets now!
🎟️ https://t.co/QWwS4Ichic pic.twitter.com/mhNJ2iLdhk— THE PARADISE (@TheParadiseOffl) September 26, 2026
Also Read… மாஸ்டர் பிளான் போடும் எதிரணி.. கலாய்த்து பேசிய ஆளும் அணி – வைரலாகும் புரோமோ!