AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Om Movie: அல்டிமேட் ஸ்ட்ரைக்… தனுஷின் ஓம் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Om Movie New Release Date: நடிகர் தனுஷின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் தமிழில் உருவாகிவரும் புதிய திரைப்படம்தான் ஓம். இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Om Movie: அல்டிமேட் ஸ்ட்ரைக்… தனுஷின் ஓம் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஓம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Oct 2026 17:14 PM IST

தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஓம் (Om Movie). இந்த படத்தை தமிழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கியுள்ள நிலையில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர். டேக் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க, அவருடன் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். இப்படத்தில் மம்முட்டி (Mammootty), தனுஷின் தந்தையாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு தமிழ் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இதன் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 16 என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டின் காரணமாக படக்குழு ஒத்திவைத்துள்ளது. அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அசோக் செல்வனை முதலில் அப்படிப் பார்த்து மிரண்டுவிட்டேன் – ப்ரீத்தி முகுந்த சொன்ன விஷயம்!

தனுஷின் ஓம் திரைப்படத்திலிருந்து வெளியான முக்கியமான அப்டேட் :

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் 3வது உருவாகியுள்ள திரைப்படம்தான் ஓம். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மம்முட்டி மற்றும் சாய் பல்லவியும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் ஓம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தனுஷின் இந்த ஓம் படமானது செம்மர கடத்தல் மற்றும் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த உண்மையான கதைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் ஸ்ரீலீலா மற்றும் தனுஷ் இருவருமே ஜோடியாக நடித்துள்ள நிலையில், இந்த படத்தில் இவர்களின் நடனத்தில் சிறப்பாக பாடல் ஒன்று இருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில்.. ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

அந்த விதத்தில் தனுஷின் இந்த ஓம் படத்தை வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் அடுத்தடுத்து இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us