காலாண்டு தேர்வு… வினாத் தாள் முறையில் பெரிய மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Tamil Nadu Quaterly Exam 2025 : தமிழகத்தில் காலாண்டு தேர்வு தொடங்கப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயற்சி பெற்று வரும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத் தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 14 : அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயற்சி பெற்று வரும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத் தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2025-26ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் 2025 ஜூன் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. 2025 செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து வருகிறது. இந்த தேர்வு 2025 செப்டம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி, செப்டம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும், 4,5ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17ஆம் தேதியும், 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு 2025 செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயற்சி பெற்று வரும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத் தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Also Read : 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு குட் நியூஸ்.. காலாண்டு விடுமுறை இத்தனை நாளா? தேர்வு அட்டவணை வெளியீடு




காலாண்டு தேர்வுக்கான வினாத் தாள் முறையில் மாற்றம்
அதில், “மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திறன் தி ட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதன்படி, இந்த திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்காக வரவுள்ள காலாண்டுத் தேர்வுகளில் திறன் பாடப்புத்தகம் சார்ந்து புத்தகம் தயாரித்து வழங்கப்பட உள்ளன.
அந்த வகையில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியில் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத் தாள்கள் அடிப்படை கற்றல் விளைவுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த வினாத் தாள்களின் மொத்த மதிப்பெண்கள், வழக்கமான காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களின் மதிப்பெண்களுக்கு சமமாக இருக்கும்.
Also Read : மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 11 நாட்கள் காலாண்டு விடுமுறை.. தேர்வு அட்டவணையும் வெளியீடு!
இது தவிர பயிற்சி நோக்கத்துக்காக அறிவியில், சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யுமாறு வழங்கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது. மேலும், காலாண்டு தேர்வுகளுக்கான அனைத்து வினாத்தாள்களையும் முன்னர் அடிப்படை மதிப்பீடு வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்ட அதே தளமான பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.