சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எப்போது? வெளியான அட்டவணை.. முழு விவரம்
CBSE Board Exams Date Sheet 2026 : 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான உத்தேச அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 204 பாடங்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

டெல்லி, செப்டம்பர் 25 : 2025-26ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தி வருகிறது. 2025-26 கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மேலும், வழக்கம் போல் 12ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு மற்றும் துணைத் தேர்வு நடத்தப்படும். மேலும் 12ஆம் வகுப்பு விளையாட்டு வீரர்களுக்கு தனித் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், மாணவர்கள் அதற்காக திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான உத்தேச அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்புக்கு முதல் பொதுத் தேர்வு 2026 பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி, மார்ச் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு இரண்டாவது பொதுத் தேர்வு 2026 மே 15ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து தேர்வுகளும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும்.




Also Read : டெட் தேர்வு.. ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
Big Update from #CBSE
Tentative Date Sheets for Class X & XII 2026
MORE details at https://t.co/Mgv75k9CQ6 pic.twitter.com/SAqQFVoChW— CBSE HQ (@cbseindia29) September 24, 2025
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 26 நாடுகளில் இருந்து 44 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என கூறப்படுகிறது. மொத்தம் 204 பாடங்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வு நடந்த 10 நாட்களில் விடைத்தாள் மதிப்பீடு பணி தொடங்கப்படும் என்றும் அது 12 நாட்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஆசிரியர்களே கவனிங்க.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. இனி வேலைக்கு சிக்கல்!
உதாரணமாக, 12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு பிப்ரவரி 20, 2026 அன்று நடத்தப்பட்டால், மதிப்பீடு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 ஆம் தேதிக்குள் முடிவடையும். தற்போது வெளியிட்ட உத்தேச அட்டவணை தற்காலிகமானவே. நாடு முழுவதும் பள்ளிகளில் இருந்து மாணவர்களின் இறுதி பட்டியல் பெற்ற பின்னர், இறுதி அட்டவணை வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.