வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி மொழி ட்ரெய்லர்!
Scene movie Telugu and Hindi trailers out now | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளுக்கான ட்ரெய்லர் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). தி ஒன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யாவிற்கு பான் இந்திய மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யாவை தங்களது இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று பான் இந்திய மொழிகளில் பல இயக்குநர்கள் வரிசைக்கட்டி காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மூன்றாவதாக வெளியாக உள்ள படம் சீன்.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வரும் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார் இந்த சீன் படத்தை. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
வெளியானது சீன் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி மொழி ட்ரெய்லர்:
அந்த வகையில் நேற்று சென்னையில் சீன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு மற்றும் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சீன் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு அது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று சீன் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி மொழி ட்ரெய்லர்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… தி ஒன் ஆன் டியூட்டி… சூர்யாவின் சீன் படத்தின் ஆடியோ & ட்ரெய்லர் லான்ச் எப்போது? வெளியான அப்டேட்!
சீன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#SCENE (Telugu & Hindi) Trailers are Out Now! 🧨
Telugu – https://t.co/Lmzhu86r2g
Hindi – https://t.co/0JF7bP81sV
Worldwide In cinemas from November 6! #DiwaliRelease 💥
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @RakenduMouliv @rajpriyan007 @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @SonyMusicSouth @NVRCinema @MMovies4u @vkfilmsrelease @SceneTheMovie @Linqmarqet @ursvamsishekar
— Zhagaram Studios (@ZhagaramOffl) November 1, 2026
Also Read… நிஜமாகவே அன்லக்கிதான் போல.. பிக் பாஸில் ரூட் எடுக்கும் புது லவ் ஸ்டோரி – வைரலாகும் ப்ரோமோ!



