தமிழ் சினிமாவில் நடிகராகும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா? வைரலாகும் தகவல்
Director Sandeep Reddy Vanga tamil acting debut update | பான் இந்திய மொழிகளில் பிரபல இயக்குநராக உள்ள சந்தீப் ரெட்டி வங்கா தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகை தற்போது வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா (Sandeep Reddy Vanga). இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படம் அவரது சினிமா கெரியரில் முக்கியமான படமகா உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலமாகதான் நடிகர் விஜய் தேவரகொண்டா பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே அதிக அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இதுவரை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான கபீர் சிங், அனிமல் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் ஸ்பிரிட் படம் உருவாகி வருகின்றது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.




தமிழ் சினிமாவில் நடிகராகும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா?
தொடர்ந்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தமிழ் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் அரசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதான் சந்தீப் ரெட்டி வங்காவின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… ப்ரீ ரிலீஸ் கல்லா கட்டும் ஆர்யாவின் ஹலோ காதல் படம் – வைரலாகும் தகவல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As per circulating reports, director #SandeepReddyVanga is set to make his Tamil acting debut with #Vetrimaaran’s #Arasan 😲🔥.
Follow 👉 @FilmyBowlTamil https://t.co/M3xNVyrZvL
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) October 27, 2026
Also Read… தனுஷின் ஓம் படத்தின் ஓவர்சீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வெளியானது அப்டேட்