நியூசிலாந்துக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த இந்திய அணி!
Ind vs Nz : நியூசிலாந்துக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு இந்திய அணி நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அதிரடி அரைசதம் காரணமாக, இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer) ஆகியோரின் அதிரடி அரைசதம் காரணமாக, இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இதன் மூலம், வெற்றிபெற நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 3 -1 ஒன்று கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி
டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த நிலையில் இந்திய அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 2 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் 10 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இருவரையும் நியூசிலாந்தின் ஆடம் மில்னே வீழ்த்தினார். முதல் 4 ஓவர்களுக்குள் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையும் படிக்க : WTC Points Table: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி.. முதலிடத்தை இழந்து 3வது இடத்திற்கு சரிந்த ஆஸ்திரேலியா!




அதிரடி காட்டிய இஷான் – ஷ்ரேயஸ் கூட்டணி
இந்த நிலையில் நெருக்கடியான நிலையில் இணைந்த இஷான் கிஷனும் ஷ்ரேயஸ் ஐயரும், நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு வெறும் 43 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் விளாசினார். மற்றொரு பக்கம் ஷ்ரேயஸ் ஐயர் இன்னும் வேகமாக ஆடி, 23 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இருவரும் ஆட்டமிழந்த பிறகு, திலக் வர்மா 8 பந்துகளில் 6 ரன்களுடன் ஏமாற்றமளித்தார். ஆனால், நமன் தீர் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 33 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 17 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து, அணியின் ஸ்கோரை 190 எட்ட உதவினர். புவனேஷ்வர் குமார் 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய இன்னிங்ஸில் மொத்தம் 15 பவுண்டரிகளும் 11 சிக்ஸர்களும் விளாசப்பட்டன.
பந்துவீச்சை பொறுத்தவரை நியூசிலாந்து வீரர் ஆடம் மில்னே சிறப்பாகச் செயல்பட்டார். 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்கத்தில் அபிஷேக், சாம்சனையும், கடைசி ஓவரில் நிதிஷ், புவனேஷ்வரையும் அவர் வெளியேற்றினார். பிளேர் டிக்னர், நாதன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து 192 ரன்கள் என்ற சவாலான இலக்கை நியூசிலாந்து எட்டுமா, அல்லது இந்தியப் பந்துவீச்சாளர்கள் மீண்டும் தங்கள் திறமையை நிரூபிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க : IND vs NZ: குல்தீப், வருண் ஏன் நீக்கப்பட்டனர்? நியூசி. தொடரில் இந்திய அணி தேர்வு குறித்து விளக்கம்!
இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 3 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் 3 போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அபாரமாக ஆடி இந்தியாவை வீழ்த்தியது. இதனால் நியூசிலாந்து அந்த அதிரடியைத் தொடருமா அல்லது இந்தியா மீண்டும் ஃபார்முக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.