பிக்பாஸில் உடைந்து அழுத அவினாஷ் அசோக்… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 7-வது வார டாஸ்க் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் போட்டியாளர் அவினாஷ் உடைந்து அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் ஆண் அல்லது பெண் என்று எவரும் அழாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவது மிகவும் சாதாரண ஒன்றாகவே உள்ளது. அது மகிழ்ச்சியானதா அல்லது வருத்தமானதா என்பது ஒவ்வொரு நபரின் செயல்களைப் பொருத்ததாகவே உள்ளது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து போட்டியாளர்களில் ஒருவராவது தினமும் அழுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 19 நிகழ்ச்சியில் இந்த 7-வது வாரம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. அதன்படி இந்த வாரம் நடைபெறும் டாஸ்க் வீட்டில் உள்ள பல போட்டியாளர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து வீட்டில் உள்ள அனைத்து தேவைகளுக்காகவும் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய டாஸ்கிலும் நீல நிற அணி வெற்றியடைந்த நிலையில் சிவப்பு நிற அணியின் தலைவராக இருந்த அவினாஷ் வீடியோ வெளியாகி உள்ளது.




பிக்பாஸில் உடைந்து அழுத அவினாஷ் அசோக்… வைரலாகும் வீடியோ:
அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்றைய நாளிற்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் சிவப்பு நிற அணியின் கேப்டனாக இருந்த அவினாஷ் உடைந்து கண்ணீர் விட்டு அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் டிடிஎஃப் வாசன் அவினாஷிற்கு ஆறுதல் கூறுவதும் அந்த வீடியோவில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடிகளா? இணையத்தில் வைரலாகும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day45 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/NoKuJjHuLp
— Vijay Television (@vijaytelevision) October 21, 2026
Also Read… அட அதுக்குள்ள சண்டை ஆரம்பிச்சுடுச்சா… பிக்பாஸில் மோதிக்கொள்ளும் அக்ஷிதா – அஸ்மிதா… வைரலாகும் வீடியோ