AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ETF முதலீடுகள்.. SEBI விடுத்த தற்காலிக தடை.. யார் யாரை பாதிக்கும்?

SEBI Gold ETF FOF Restrictions | பொதுமக்கள் மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகளை விடவும் தங்க ஈடிஎஃப் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்களில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தான் அது தொடர்பாக செபி தற்காலிகள் தடைகளை விதித்துள்ளது.

ETF முதலீடுகள்.. SEBI விடுத்த தற்காலிக தடை.. யார் யாரை பாதிக்கும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Oct 2026 23:26 PM IST

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி (SEBI – Securities and Exchange Board Of India), முக்கிய தற்காலிக கட்டுப்பாடு விதிகளை விதித்துள்ளது. அதாவது, தங்கத்தில் முதலீடு செய்ய உதவும் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் (Mutual Fund Schemes) புதிய முதலீடுகளை பெறுவ்தற்கான தற்காலிக கட்டுப்பாடுகளை அது விதித்துள்ளது. இந்த நிலையில், செபி வெளியிட்டுள்ள அந்த முக்கிய கட்டுப்பாடுகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செபி புதிய கட்டுப்பாடுகள் – யார் யாருக்கு சிக்கல்?

செபி வெளியிட்டுள்ள இந்த முக்கிய கட்டுப்பாடுகளின் காரணமாக, இனி புதியதாக எஸ்ஐபி (SIP – Systematic Investment Fund) தொடங்குவோருக்கும், புதியதாக லம்சம் முறையில் முதலீடு செய்வோருக்கும் Gold ETF FOF-ல் முதலீடு செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. செபியின் உத்தரவு மற்றும் AMFI அமைப்பின் அறிவுறுத்தல்கள் வாயிலாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க : EPFO : இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் சேனல்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

கோல்டு ETF Vs கோல்டு ETF FOF – இரண்டுக்குமான வித்தியாசம்

கோல்டு ETF மற்றும் கோல்டு ETF FOF இவை இரண்டுக்குமான வித்தியாசம் அவற்றை எப்படி வாங்குகிறோம் என்பதை பொருத்ததாக உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கோல்டு ETF என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுவது ஆகும். ஆனால், இதுவே கோல்டு ETF FOF என்றால் ஒரு முதலீட்டு நிறுவனம் ஃபண்ட் ஹவுஸ், முதலீட்டு ஆப் நிறுவனங்களால் கூட இயக்கூடிய ஒன்றாக உள்ளதுதான்.

இதையும் படிங்க : புதுப்புது டெக்னாலஜிஸ்.. ஹீரோ களமிறக்கிய சூப்பர் பைக்.. என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

71 சதவீத அதிக முதலீடு

செப்டம்பர் மாதத்தில் மட்டும் தங்க இடிஎஃப் முதலீடு சுமார் ரூ.4,451 கோடி வரை முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்த அளவை ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது அது சுமார் 71 சதவீதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில், தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், மேலும் முதலீடுகள் குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow Us