Ranji Trophy: ரஞ்சி கோப்பை! மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் ஏன் இல்லை.. எம்சிஏ தகவல்!
Suryakumar Yadav dropped Ranji: சூர்யகுமார் யாதவ் ரஞ்சி கோப்பை மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார். பயிற்சி முகாம்களில் பங்கேற்காதது, சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் அனுபவமின்மை ஆகியவையே முக்கிய காரணங்கள். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீண்டும் அணிக்குத் திரும்ப, அவர் எம்சிஏ கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் எனத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் ரஞ்சி கோப்பை தொடக்கப் போட்டிக்கான மும்பை அணியிலிருந்து முன்னாள் இந்திய அணியின் (Indian Cricket Team) டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) நீக்கப்பட்டுள்ளார். ரஞ்சி கோப்பைக்கு முந்தைய பயிற்சி முகாம்களில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து பங்கேற்காததே அவரது தேர்வுக்கு முக்கிய காரணம் என மும்பை கிரிக்கெட் சங்க வட்டாரம் பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளது. தேசிய அணியில் தனது இடத்தை இழந்த பிறகு, உள்ளூர் கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பத் தயாராக இருப்பதாக சூர்யகுமார் தெரிவித்திருந்தார். இருப்பினும், சூர்யகுமார் யாதவ் மும்பை அணியின் பருவத்திற்கு முந்தைய பயிற்சி முகாம்களில் பங்கேற்கவில்லை. மும்பை அணி தேர்வு செய்யப்படுவதற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு, தேர்வு குறித்து மும்பை அணி அவரைத் தொடர்பு கொண்டது. அப்போது சூர்யகுமார் யாதவ் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ALSO READ: இங்கிலாந்து ஆராய்ச்சி.. கிரிக்கெட் மைதானத்தில் புது முயற்சி.. டி20 ஆடுகளம் எப்படி மாறும்?




தேர்வுக்குழு கூறியது என்ன..?
Mumbai senior men’s chief selector Rajesh Pawar speaks about Yashasvi Jaiswal’s availability for the Ranji Trophy opener, Ayush Mhatre’s elevation as the vice-captain, Shardul Thakur’s injury and the decision to not include Suryakumar Yadav in the squad.
“Surya hasn’t played red-ball cricket for a long period. We focused on the youngsters.”
@shamik100 reports.
@IDFCFIRSTBank #Ranjitrophy
— RevSportz Global (@RevSportzGlobal) October 5, 2026
மும்பை வீரர்கள் கடந்த ஒரு மாதமாக ரஞ்சி தொடருக்காகத் தயாராகி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், திடீரென சூர்யகுமாரை அணியில் சேர்ப்பது என்பது, ஏற்கெனவே பயிற்சி முகாமில் கடினமாக உழைத்துக்கொண்டிருந்த ஒரு இளம் வீரரை அணியிலிருந்து நீக்குவதாக அமைந்திருக்கும். எம்சிஏ வட்டாரம் இதுதொடர்பாக கூறுகையில், “இறுதியில், இது ஒரு குழு விளையாட்டு. சமீப காலங்களில் சூர்யகுமாருக்கு சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லை. எனவே, தேர்வுக் குழுவால் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது,” என்று கூறியது. ஆகையால், 2026 அக்டோபர் 11 முதல் 14 வரை வான்கடே மைதானத்தில் சண்டிகருக்கு எதிராக நடைபெறும் முதல் ரஞ்சி கோப்பை போட்டிக்கான மும்பையின் 16 பேர் கொண்ட அணியில் சூர்யகுமார் சேர்க்கப்படவில்லை.
ALSO READ: கேப்டனாக புவனேஷ்வர் குமார்.. 6 பேர் கொண்ட இந்திய அணிக்கு தலைமை!
சூர்யகுமாருக்கு மீண்டும் அணிக்கு திரும்புவாரா..?
இருப்பினும், சூர்யகுமார் யாதவிற்கான மும்பை அணியில் தனது இடத்தை மீண்டும் பெற, அவர் எம்சிஏ கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும். போலீஸ் ஷீல்ட் அல்லது புருஷோத்தம் ஷீல்ட் போன்ற போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாகச் செயல்பட்டால், மீண்டும் பரிசீலிக்கப்படலாம். இதற்கிடையில், 2026-27 சீசனில் வரவிருக்கும் உள்ளூர் போட்டிகளுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படும் என்று மும்பை தேர்வுக் குழு சூர்யகுமாரிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது. ஐபிஎல் முடிந்த உடனேயே சூர்யகுமார் டி20 மும்பை லீக்கில் பங்கேற்றார். இருப்பினும், சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் அவரது அனுபவம் தற்போது குறைவாகவே உள்ளது.