AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பின்னடைவு.. காயத்தில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்!

Prasidh Krishna Injury: இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வரும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இடது தொடை தசைநார் காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அணிக்கு பெரும் பின்னடைவாகும். காயத்திலிருந்து மீள மூன்று வாரங்கள் ஆகும் என்பதால், நவம்பர் 4-ல் தொடங்கும் ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார்.

Team India: நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பின்னடைவு.. காயத்தில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்!
இந்திய அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 06 Oct 2026 18:08 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (IND vs WI) எதிரான டி20 தொடருக்குப் பிறகு, இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். அங்கு, இந்தத் தொடர் மூன்று வடிவங்களிலும் நடைபெறும். இருப்பினும், இந்தச் சுற்றுப்பயணத்திற்கு முன்பாக இந்திய அணிக்கு (Indian Cricket Team) ஒரு பெரிய பின்னடைவு சந்தித்துள்ளது. இடது தொடை தசைநார் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா குறைந்தது 3 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது. வருகின்ற நவம்பர் 4ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்பதற்கு வாய்ப்பில்லை. இது இந்திய அணியின் தேர்வில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: 2023-ல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டி20 தொடரை எப்படி இழந்தது?

கிடைத்த தகவலின்படி, குவஹாத்தியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது பிரசித் கிருஷ்ணா காயமடைந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் 31வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா காயத்தால் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் அவரால் ஐந்து ஓவர்கள் மட்டுமே பந்து வீச முடியவில்லை. இதன் விளைவாக, புது சண்டிகரில் நடைபெறவிருந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலிருந்தும் பிரசித் கிருஷ்ணா விலக்கப்பட்டார். காயத்திலிருந்து குணமடைவதற்கும், தனது மறுவாழ்வு சிகிச்சையைத் தொடங்குவதற்கும் பிரசித் கிருஷ்ணா பெங்களூருவில் உள்ள பிசிசி-யின் சிறப்பு மையத்தில் இணைந்துள்ளார்.

பிரசித் கிருஷ்ணா மீண்டும் களமிறங்குவது எப்போது..?

மருத்துவக் குழுவின் கூற்றுப்படி, பிரசித் கிருஷ்ணா முழுமையாகக் குணமடைய சுமார் மூன்று வாரங்கள் ஆகும். அதன் பிறகு, நான்காவது வாரத்திலிருந்து அவரால் முழு வேகத்தில் பந்துவீச்சுப் பயிற்சியை மீண்டும் தொடங்க முடியும். இந்தக் குணமடையும் காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அணி நிர்வாகம் பிரசித் கிருஷ்ணா விஷயத்தில் எந்தவிதமான அவசரமான முடிவு எடுக்க விரும்பவில்லை. எனவே, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இந்தக் காயம் பிரசித் கிருஷ்ணா உள்ளூர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அட்டவணையையும் பாதித்துள்ளது. 2026 அக்டோபர் 11ம் தேதி விஜயவாடாவில் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் அணிகள் மோதும் ரஞ்சி கோப்பையின் முதல் போட்டியை பிரசித் கிருஷ்ணா தவறவிடுவார். இருப்பினும், ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 2026 நவம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. அதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்காக அவரை முழுமையாகப் புத்துணர்ச்சியுடனும், போட்டிக்குத் தயாராகவும் வைத்திருக்க அணி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

ALSO READ: கேப்டனாக புவனேஷ்வர் குமார்.. 6 பேர் கொண்ட இந்திய அணிக்கு தலைமை!

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி இந்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் பல வீரர்கள் இடம்பெறலாம். ஆனால் அதற்கு முன்பாக, இந்த ஆண்டுக்கான தேர்வு செயல்முறை குறித்து ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. பிசிசிஐ-யின் மூத்த ஆண்கள் தேர்வுக் குழு, இந்த வாரம் அதாவது நேற்று முதல் 2026 அக்டோபர் 5 முதல் 11 வரை கூடுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், தலைமைத் தேர்வாளராக அஜித் அகர்கரின் பதவிக்காலம் கடந்த 2026 அக்டோபர் 4 அன்று முடிவடைந்தது. ஆனால், அவருக்குப் பின் பிசிசிஐ அடுத்த தலைமை தேர்வாளரை இன்னும் நியமிக்கவில்லை.

Follow Us