AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: தன்னலமற்ற தன்மை.. கேப்டன் ஷ்ரேயாஸை பாராட்டி தள்ளிய காம்பீர்!

Gambhir Praises Shreyas Iyer: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் T20 தொடருக்கு முன்னதாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை மனதாரப் பாராட்டினார். ஐயரின் தன்னலமற்ற தலைமைப் பண்பு, அணிக்குத் தனது பேட்டிங் நிலையை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றை காம்பீர் எடுத்துரைத்தார். சமூக ஊடகங்களில் பரவிய இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வதந்திகளுக்கு காம்பீர் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.

IND vs WI: தன்னலமற்ற தன்மை.. கேப்டன் ஷ்ரேயாஸை பாராட்டி தள்ளிய காம்பீர்!
கவுதம் காம்பீர் - ஷ்ரேயாஸ் ஐயர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Oct 2026 19:38 PM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2026 அக்டோபர் 6ம் தேதியான நாளை முதல் தொடங்குகிறது. முதல் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை (Shreyas Iyer) பாராட்டினார். ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில், இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. சில காலமாக, கவுதம் காம்பீருக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் இடையே கருத்து வேறுபாடும் பதற்றமும் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்தநிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் இந்த விவாதங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இதுதொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.

ALSO READ: காத்திருக்கும் ரோஹித் சர்மா சாதனை.. முறியடிப்பாரா ஷ்ரேயாஸ் ஐயர்?

ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசிய கவுதம் காம்பீர்:

ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில், கவுதம் காம்பீர் 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த தனது நாட்களை நினைவு கூர்ந்தார். ஷ்ரேயாஸுடன் பணியாற்றிய அனுபவம் எவ்வளவு அற்புதமாக இருந்தது என்று காம்பீர் கூறினார். இதில், “நான் 2024-ல் கேகேஆர் அணியின் பயிற்சியாளரானேன், அதுதான் ஷ்ரேயாஸுடன் நான் பணியாற்றிய முதல் அனுபவம். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். ஐயரைப் பற்றி நான் நினைத்த சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் அணிக்காகத் தனது பேட்டிங் நிலையை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் நெகிழ்வுத்தன்மை உடையவர். இந்திய அணியின் தேவையைக் கருத்தில் கொண்டு, மற்றொரு பேட்ஸ்மேன் முதலில் களமிறங்கினால், ஷ்ரேயாஸ் அதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டார்.” என்று கூறினார்.

ALSO READ: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20.. ஏகானா ஸ்டேடியத்தின் சாதனை எப்படி?

ஷ்ரேயாஸின் குணம் எப்படி..?

தொடர்ந்து பேசிய கவுதம் காம்பீர், “ஷ்ரேயாஸ் ஐயரிடம் உள்ள மிகப்பெரிய குணம் தன்னலமற்ற தன்மை. எந்தவொரு கேப்டனிடமும் அல்லது ஒரு நல்ல தலைவரிடமும் இருக்க வேண்டிய முதல் குணம் இந்தக் குணம்தான். ஒரு நல்ல தலைவருக்கு தன்னலமற்ற தன்மையே மிக முக்கியமான குணம். ஷ்ரேயாஸ் ஐயர் இந்தக் குணத்தால் நிரம்பியுள்ளார். இது அவரது கேப்டன்சிக்கு ஒரு கூடுதல் பலம். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எவ்வளவு ஒழுக்கத்துடன் இருந்தாலும், எவ்வளவு உடற்தகுதியுடன் இருந்தாலும் அல்லது கிரிக்கெட் உலகில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தாலும், உங்களிடம் தன்னலமற்ற தன்மை இல்லையென்றால், அதனால் எந்தப் பயனும் இல்லை. ஷ்ரேயாஸ் இந்த குணங்கள் அனைத்தையும் கொண்டுள்ளார்,” என்று கம்பீர் கூறினார்.

Follow Us