AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. இந்த 6 அனுபவ வீரர்கள் மட்டுமே உறுதி!

India's 2027 World Cup XI: 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பாதி வீரர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் ரிஷப் பண்ட் இடம்பெற வாய்ப்பில்லை, இஷான் கிஷனுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ரோஹித், கில், கோலி ஆகியோர் டாப் ஆர்டரில் தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளனர். மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். காயமிருந்தாலும், ஹர்திக் பாண்ட்யா 6வது இடத்திற்கு சிறந்த தேர்வாக தேர்வுக்குழு கருதுகிறது.

Team India: 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. இந்த 6 அனுபவ வீரர்கள் மட்டுமே உறுதி!
சுப்மன் கில் - ரோஹித் சர்மாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Oct 2026 18:37 PM IST

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் (Indian Cricket Team) பாதி வீரர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இடம்பெறமாட்டார் என்று தெரிகிறது. இஷான் கிஷனின் தற்போதைய ஆட்டத்திறனை அடிப்படையாகக் கொண்டு, பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிற்கு மாற்று வீரராக அவருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்று தெரிகிறது. இந்திய அணியில் இடம்பெறவுள்ள 6 பேட்ஸ்மேன்களும் மிகுந்த அனுபவம், திறமை மற்றும் உலகக் கோப்பை அனுபவம் கொண்டவர்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த 6 வீரர்களும் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்கள். அதன்படி, டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா (Rohit Sharma), சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: ஒரே நாளில் 2 போட்டிகளில் விளையாடும் IND.. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் எந்த நேரத்தில் நடைபெறும்?

டாப் ஆர்டரில் யார் யார் விளையாட வாய்ப்பு..?

இந்திய அணியின் பேட்டிங் வரிசையைப் பார்க்கும்போது, ​​2023 மற்றும் 2027ம் ஆண்டுகளுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. 2023 அணியிலும் இருந்த ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். இருவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள், உலகக் கோப்பை வரை ரோஹித் மற்றும் கில் தங்கள் நல்ல ஃபார்மைத் தொடர்ந்தால் சிறப்பானதாக இருக்கும். விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்குவது உறுதி.

2026ம் ஆண்டு நிலவரப்படி, ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவரும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 வீரர்கள் பட்டியலில் உள்ளனர். தற்போது கில் இந்தப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார். இந்திய அணியின் முன்னணி வரிசையின் இந்த ஆட்டத்திறன், மிகச் சிறந்த பந்துவீச்சுத் தாக்குதல்களைக் கூட சிதைக்கும் திறன் கொண்டது.

ALSO READ: 26 நாட்களில் 10 டி20.. நிற்காமல் ஓடும் இந்திய கிரிக்கெட் அணி.. அடுத்தடுத்த போட்டிகள் என்ன?

4வது, 5வது மற்றும் 6வது இடங்களில் யார் களம்?

உலகின் தலைசிறந்த மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஷ்ரேயாஸ் ஐயரும் ஒருவர். ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடத்தில் களமிறங்கிய ஐயர், 47-க்கும் மேற்பட்ட சராசரியில் 2,000 ரன்கள் எடுத்துள்ளார். ஐந்தாவது இடத்தில் களமிறங்கும் கே.எல். ராகுல், இந்திய அணியில் முதல் தேர்வு விக்கெட் கீப்பராகவும் இருப்பார். ஐந்தாவது இடத்தில் ராகுலின் ஒருநாள் சராசரி 68.58 ஆகும். இந்த இடத்தில் கே.எல்.ராகுல் 4 சதங்களையும் 10 அரை சதங்களையும் அடித்துள்ளார்.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு இடம் கிடைக்குமா?

ஹர்திக் பாண்ட்யா தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். மேலும், ஐபிஎல் 2026-க்கு பிறகு இந்திய அணிக்காக ஹர்திக் பாண்ட்யா எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் தொடரில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. இருப்பினும், உலகக் கோப்பையில் 6-வது இடத்திற்கு ஹர்திக்கே சிறந்த தேர்வாக இருப்பார் என்று இந்திய தேர்வுக்குழு நம்புகிறது. இந்திய அணிக்காக 6-வது இடத்தில் இதுவரை களமிறங்கியுள்ள ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

Follow Us