IND vs WI: ரோஹித், கோலிக்கு ரெஸ்ட்? இந்திய கேப்டன் கில் சொன்ன விஷயம் இதுதான்!
Shubman Gill World Cup preparations: இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது. சண்டிகரில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடித்தும் இந்தியா தோல்வியடைந்தது. கேப்டன் சுப்மன் கில், 2027 உலகக் கோப்பைக்கு முன் ஃபீல்டிங் மற்றும் டெத் ஓவர் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை என்றார். ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுத்து சோதனை செய்ய நேரமில்லை என்றும் அவர் கூறினார்.
சண்டிகரில் நேற்று அதாவது 2026 அக்டோபர் 3ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (IND vs WI) எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் (Indian Cricket Team) விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் சதம் அடித்தபோதிலும், இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இருப்பினும், ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக, பீல்டிங் மற்றும் டெத் ஓவர் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை என்றும், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான தனது தயாரிப்புகள் குறித்தும் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் கில், “ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களை வைத்துப் பரிசோதனை செய்ய நேரமில்லை,” என்று கூறினார்.
ALSO READ: முடிந்த ஒருநாள் தொடர்! IND vs WI டி20 தொடர் எப்போது..? முழு அட்டவணை!
ரோஹித் மற்றும் விராட் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து வந்ததையும், கே.எல். ராகுலின் பங்களிப்பையும் கில் பாராட்டினார். அதில், ” முன்னாள் இந்திய கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். ரோஹித் சர்மா கடந்த 4 இன்னிங்ஸ்களில் தனது மூன்றாவது சதத்தையும் அடித்திருப்பார், மிஸ்ஸாகி விட்டாது. ரோஹித் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார். கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவர் அணிக்காக சிறப்பாகப் பணியாற்றி, அற்புதமாக பேட்டிங் செய்துள்ளார் “என்றார்.




ரோஹித் மற்றும் விராட்டிற்கு ஓய்வு கொடுக்க நேரமில்லை
சில ஒருநாள் போட்டிகளில் கோலி மற்றும் ரோஹித்துக்கு ஓய்வளிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கில், ”ரோஹித் மற்றும் கோலியை ஓய்வு கொடுத்து பரிசோதனை செய்வதற்கு அதிக நேரம் இல்லை. உண்மையைச் சொல்வதானால், பரிசோதனை செய்து பார்க்க அதிக நேரம் இல்லை. அடுத்த தொடரிலிருந்து எங்களிடம் உள்ள அனைத்து வீரர்களும் விளையாடுவார்கள் என்று நம்புகிறோம். உலகக் கோப்பையில் நாங்கள் பயன்படுத்தப் போகும் கூட்டணியுடன் விளையாடத் தொடங்குவது முக்கியம்
எங்கள் பீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் 6-7 கேட்சுகளைத் தவறவிட்டோம். உலகக் கோப்பைக்கு முன்பு இது ஒரு நல்ல அறிகுறி அல்ல. எங்கள் பீல்டிங் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்,” என்று கில் கூறினார்.
ALSO READ: 351 ரன்கள் எடுத்தபோதிலும் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஒருவராக வெற்றிய ருசித்த ஷாய் ஹோப்
தொடர்ந்து பேசிய கில், “சில நேரங்களில், குறிப்பாக டெத் ஓவர்களில், நாம் தாக்க வேண்டுமா அல்லது தற்காத்து ஆட வேண்டுமா என்பதில் நமக்குத் தெளிவு இருப்பதில்லை. எதிரணி 5 அல்லது 6 விக்கெட்டுகளை இழந்திருந்தால், என்ன ஃபீல்டிங் அமைப்பது என்று உறுதியாகத் தெரியாது. நாம் டெத் ஓவர் பந்துவீச்சை மிக விரைவில் தொடங்குகிறோமா அல்லது மிடில் ஓவர்களில் பந்துவீசுவதைப் போலவே இப்போதும் பந்துவீசுகிறோமா?” என்று கூறினார்.