AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: முடிந்த ஒருநாள் தொடர்! IND vs WI டி20 தொடர் எப்போது..? முழு அட்டவணை!

IND vs WI T20 Series: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2026 அக்டோபர் 6 முதல் 17 வரை நடைபெறுகிறது. லக்னோ, ராஞ்சி, இந்தூர், ஹைதராபாத், பெங்களூரு என ஐந்து வெவ்வேறு நகரங்களில் அனைத்துப் போட்டிகளும் இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளன. இத்தொடரின் முழுமையான போட்டி அட்டவணை மற்றும் மைதான விவரங்களை இங்கே காணலாம்.

IND vs WI: முடிந்த ஒருநாள் தொடர்! IND vs WI டி20 தொடர் எப்போது..? முழு அட்டவணை!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் அட்டவணைImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Oct 2026 15:03 PM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான ஒருநாள் தொடர் முடிந்த கையோடு, இரு அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இந்தத் தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 6ம் தேதியும், கடைசி போட்டி 2026 அக்டோபர் 17 ம் தேதியும் நடைபெறும். சுவாரஸ்யமாக, இந்த 5 போட்டிகளும் வெவ்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளன. எனவே, கிரிக்கெட் (Cricket Match) ரசிகர்கள் தேதிகளையும் போட்டி நடைபெறும் இடங்களையும் அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றன. இது தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.

ALSO READ: முதல் பந்திலேயே அதிக முறை டக் அவுட்.. விராட் கோலி படைத்த மோசமான சாதனை!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடர் அட்டவணை:

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 6ம் தேதி லக்னோவில் நடைபெற உள்ளது. பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும்.

 ராஞ்சியில் இரண்டாவது டி20 போட்டி:

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, வருகின்ற 2026 அக்டோபர் 9ம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதான வளாகத்தில் நடைபெறும். இப்போட்டி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி, வருகின்ற 2026 அக்டோபர் 11ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டியும் இரவு 7:00 மணிக்குத் தொடங்கும்.

ஹைதராபாத்தில் 4வது போட்டி

நான்காவது டி20 போட்டிக்காக இரு அணிகளும் 2026 அக்டோபர் 14ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு வருகின்றன. இப்போட்டி இரவு 7:00 மணிக்குத் தொடங்குகிறது. இந்தத் தொடரின் 5வது மற்றும் கடைடி டி20 போட்டி 2026 அக்டோபர் 17ம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியும் இரவு 7:00 மணிக்குத் தொடங்குகிறது.

ALSO READ: 351 ரன்கள் எடுத்தபோதிலும் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஒருவராக வெற்றிய ருசித்த ஷாய் ஹோப்

முழு அட்டவணை:

  • முதல் டி20 போட்டி- 2026 அக்டோபர் 6ம் தேதி – லக்னோ
  • 2வது டி20 போட்டி – 2026 அக்டோபர் 9ம் தேதி – ராஞ்சி
  • 3வது டி20 போட்டி- 2026 அக்டோபர் 11ம் தேதி – இந்தூர்
  • 4வது டி20 போட்டி – 2026 அக்டோபர் 14ம் தேதி – ஹைதராபாத்
  • 5வது மற்றும் கடைசி டி20 போட்டி- 2026 அக்டோபர் 17ம் தேதி – பெங்களூரு

அதாவது, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2026 அக்டோபர் 6 முதல் 17 வரை நடைபெறும். மேலும், அனைத்துப் போட்டிகளும் இரவு 7 மணிக்குத் தொடங்கும்.

Follow Us