AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: ஒரே நாளில் 2 போட்டிகளில் விளையாடும் IND.. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் எந்த நேரத்தில் நடைபெறும்?

Team India Dual Cricket Challenge: வரும் அக்டோபர் 6, 2026 அன்று இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரே நேரத்தில் இரு போட்டிகள் காத்திருக்கின்றன. ஒரு இந்திய அணி லக்னோவில் வெஸ்ட் இண்டீஸ் உடன் டி20 தொடரிலும், மற்றொரு இந்திய 'ஏ' அணி புதுச்சேரியில் ஆஸ்திரேலியா 'ஏ' உடன் ஒருநாள் போட்டியிலும் களமிறங்குகிறது. இந்த அரிய நிகழ்வு, போட்டி நேரங்கள், இடங்கள், ஹர்திக் பாண்ட்யாவின் காயம் மற்றும் புதிய வீரர் சூர்யான்ஷ் ஷெட்ஜ் குறித்த தகவல்களை இக்கட்டுரை விவரிக்கிறது.

Team India: ஒரே நாளில் 2 போட்டிகளில் விளையாடும் IND.. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் எந்த நேரத்தில் நடைபெறும்?
ஷ்ரேயாஸ் ஐயர் - ருதுராஜ் கெய்க்வாட்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Oct 2026 17:07 PM IST

இந்திய கிரிக்கெட் அணிக்கு (Indian Cricket Team) வருகின்ற 2026 டிசம்பர் மாதம் வரை இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன. இந்திய அணியின் அடுத்த சவால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியாகும். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (IND vs WI) இடையேயான முதல் டி20 போட்டி நாளை அதாவது 2026 அக்டோபர் 6ம் தேதி லக்னோவில் நடைபெற உள்ளது. இருப்பினும், அதே நாளில், மற்றொரு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. சுவாரஸ்யமாக, இரண்டு இந்திய அணிகளும் ஒரே நேரத்தில் களமிறங்க உள்ளன.

ALSO READ: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20.. ஏகானா ஸ்டேடியத்தின் சாதனை எப்படி?

இந்திய டி20 அணி தனது முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2026 அக்டோபர் 6ம் தேதி விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியும் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை அதாவது 2026 அக்டோபர் 6ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலக நேரிட்டது. அவருக்குப் பதிலாக சூர்யான்ஷ் ஷெட்ஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள்

இந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி புதுச்சேரியில் இந்திய நேரப்படி மதியம் 2:00 மணிக்குத் தொடங்கும். இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையே நடைபெறும். முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். ஆக, ஒருபுறம் முதல் போட்டி லக்னோவிலும், மறுபுறம் இரண்டாவது இந்திய அணி புதுச்சேரியிலும் களமிறங்கும்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. டி20 தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் இடம்பெறும். இதற்கிடையில், 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்திய ‘ஏ’ அணி, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2026 அக்டோபர் 6 முதல் 11 வரை நடைபெறும்.

இரு போட்டிகளும் எத்தனை மணிக்குத் தொடங்கும்?

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணி இடையேயான முதல் டி20: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். இப்போட்டி லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும்.

இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா ‘ஏ’ முதல் ஒருநாள் போட்டி: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:00 மணிக்குத் தொடங்கும். இப்போட்டி புதுச்சேரியில் நடைபெறும்.

ALSO READ: காத்திருக்கும் ரோஹித் சர்மா சாதனை.. முறியடிப்பாரா ஷ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி20 அணி:

ஷ்ரேயாஸ் ஐயர், வைபவ் சூர்யவன்ஷி, திலக் வர்மா, நமன் திர், அபிஷேக் சர்மா, ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்ஷர் படேல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.

இந்திய ஏ ஒருநாள் அணி:

ருதுராஜ் கெய்க்வாட், பிரியான்ஷ் ஆர்யா, சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், சூர்யன்ஷ் ஷெட்ஜ், நிஷாந்த் சிந்து, அர்ஷின் குல்கர்னி, விப்ராஜ் நிகாம், அர்ஷத் கான், குமார் குஷாக்ரா, பிரப்சிம்ரன் சிங், யஷ் தாக்கூர், குர்ஜாபனேத் சிங்.

Follow Us