ஜூலை 12ஆம் தேதி வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு – அண்ணாமலை அறிவிப்பு..
ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் 'வீர் லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜகவிலிருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கிய பிறகு, அண்ணாமலை நடத்தும் முதல் பெரிய பொதுமாநாடு இதுவாக இருப்பதால், தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த மாநாட்டிற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜூலை 2, 2026: பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, சமீபத்தில் ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) என்ற புதிய அமைப்பைத் தொடங்கி, தனது புதிய அரசியல் பயணத்தை அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்த அமைப்பின் முதல் மாநில மாநாடு வருகிற ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. இருப்பினும், பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொள்வேன் என்று அறிவித்திருந்தார்.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை:
இதற்கிடையில், அண்ணாமலைக்கும் பாஜக மேலிடத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், தமிழக பாஜகவில் சிலர் அவருக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. மேலும், அவர் விரைவில் பாஜகவிலிருந்து விலகுவார் என்ற தகவல்களும் பரவின.
மேலும் படிக்க: பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம்.. காட்டுத் தேனீக்கள் தாக்கி பேராசிரியர் பலி.. வேளாண் கல்லூரி மாணவர்கள் 13 பேர் காயம்!!
இந்தச் சூழலில், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய அண்ணாமலை, பின்னர் பாஜகவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பின், புதிய அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வீ த லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய அண்ணாமலை:
அதனைத் தொடர்ந்து, ஜூன் மாத இரண்டாவது வாரத்தில் ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்குவதாக அறிவித்த அவர், புதிய அரசியல் மாற்றத்திற்கான அடித்தளமாக இந்த அமைப்பு செயல்படும் என்றும், ஆரம்பத்தில் சமூக இயக்கமாக செயல்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: “ஆட்சியை கவிழ்க்க திமுக தீவிர முயற்சி!”.. மு.க.ஸ்டாலின் மீது சிபிஎம் சண்முகம் சரமாரி குற்றச்சாட்டு!!
மேலும், wetheleaders.org என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி, தன்னுடன் இணைந்து பயணிக்க விரும்புவோர் அதில் பெயர் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்து உறுப்பினர்களாக சேரலாம் என்றும் அழைப்பு விடுத்தார். அவர் அறிவிப்பு வெளியிட்ட முதல் 24 மணி நேரத்திலேயே சுமார் 13 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.
ஜூலை 12-ல் முதல் மாநாடு:
இந்நிலையில், தனது அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் ‘வீர் லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜகவிலிருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கிய பிறகு, அண்ணாமலை நடத்தும் முதல் பெரிய பொதுமாநாடு இதுவாக இருப்பதால், தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த மாநாட்டிற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.