35 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபர்.. DNA பரிசோதனை மூலம் குடும்பத்துடன் இணைந்தார்.. சீனாவில் உணர்ச்சிகர சம்பவம்!
Chinese Man Found His Family After 35 Years | சீனாவை சேர்ந்த லீ ஸெக்கிங் என்ற நபர் தனது 4 வயதில் காணாமல் போயுள்ளார். இந்த நிலையில், 35 ஆண்டுகளுக்கு பிறகு அவர் டிஎன்ஏ பரிசோதனை மூலம் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
பெய்ஜிங், ஜூலை 01 : சீனாவில் (China) சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், டிஎன்ஏ பரிசோதனை மூலம் தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு அவர் இணையத்தில் பதிவிட்ட ஒரு பதிவின் மூலம் தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். இந்த நிலையில், சீனாவில் நடைபெற்ற இந்த உணர்ச்சிவச பொங்கும் சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீனாவில் 4 வயதில் காணாமல் போன மாற்றுத்திறனாளி சிறுவன்
சீனாவில் ஹெநான் மாகாணத்தை சேர்ந்தவர் லீ ஸெக்கிங் என்ற நபர். இவர் வாய் பேசவும், காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். 1991 ஆம் ஆண்டு இவர் தனது நண்பர்கள் உடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது விளையாட்டாக அங்கு நின்றுக்கொண்டு இருந்த ஒரு ரயிலில் ஏறியுள்ளார். பின்னர் ரயிலின் இருக்கைக்கு அடியில் ஒளிந்துக்கொண்ட சிறுவன் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார்.
இதையும் படிங்க : அமைதி திரும்புமா? அமெரிக்காவும் ஈரானும் புது உடன்பாடு.. வெளியான தகவல்!
தத்தெடுத்து வளர்த்த உணவக உரிமையாளர்
ரயிலில் அயர்ந்து தூங்கிய லீ, புதிய இடத்திற்கு சென்று கண் விழித்துள்ளார். அவரால் வாய் பேச முடியாது, காதும் கேட்காது என்பதால் அவரால் தான் எங்கிருந்து வந்தேன், தனது பெற்றோர்கள் யார் என்ற விவரங்களை சொல்ல முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் தான், உணவக உரிமையாளர் ஒருவர் அவரை தத்தெடுத்து வளர்த்துள்ளார். இவ்வாறு 31 ஆண்டுகள் அவர் தான் வழித்தவறி சென்ற இடத்திலேயே தனது வாழ்க்கையை கழித்துள்ளார்.
இதையும் படிங்க : 68,900 பேரை காணவில்லை.. பெரும் சோகத்தில் வெனிசுலா நிலநடுக்கம்.. விவரம் என்ன?
குடும்பத்தை தேட புதிய முயற்சியை கையில் எடுத்த லீ
லீ 35 ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்தை தேடும் முயற்சியை தொடங்கியுள்ளார். அதே சமயம் அவரது குடும்பத்தினரும் அவரை தேடி வந்துள்ளனர். லீ ஸெக்கிங்கிற்கு சிறு வயது முதலே தனது பெயரை தலைகீழாக எழுதும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அவ்வாறு அவர் தனது பெயரை தலைகீழாக எழுதி இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதனை கவனித்த அவரது சகோதரர், அது தனது தம்பி என்பதை அடையாளம் கண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையை குடும்பத்தினர் நாடிய நிலையில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.