Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் – பயணிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்திய அறிவிப்பு

Indian Railways Update: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு கடைசி நேர குழப்பத்தை தவிர்க்கும் வகையில் ரிசர்வேஷன் சார்ட் விவரங்களை ரயில் கிளம்பும் நேரத்தில் இருந்து சரியாக 10 மணி நேரத்துக்கு முன்னதாக தெரிந்துகொள்ளும் அறிவிப்பை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் – பயணிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்திய அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Dec 2025 19:39 PM IST

ரயில் (Train) பயணிகளின் கடைசி நேர குழப்பத்தை குறைக்கும் வகையில், முதல் முன்பதிவு இறுதிப்பட்டியல் (Reservation Chart) தயாரிக்கும் நேரத்தை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம், இனி பயணிகள் தங்களின் ரயில் டிக்கெட் உறுதியாகிவிட்டதா அல்லது காத்திருப்பு பட்டியலில் உள்ளதா என்பதை ரயில் புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே தெரிந்து கொள்ள முடியும். இந்த புதிய விதிமுறை, பயணத் திட்டமிடலை எளிதாக்குவதுடன், குறிப்பாக வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் பயணிகளின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ரயிலில் டிக்கெட் உறுதியாகவில்லை என்றால், வேறு பயண ஏற்பாடுகளை முயற்சிக்க முடியும்.

ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு கடைசி நேர குழப்பத்தை தவிர்க்கும் வகையில் ரிசர்வேஷன் சார்ட் விவரங்களை ரயில் கிளம்பும் நேரத்தில் இருந்து 10 மணி நேரத்துக்கு முன்னதாக தெரிந்துகொள்ளும் அறிவிப்பை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு முன் ரயில்களில் ரிசர்வேஷன் சார்ட், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்டது. இதனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள், நீண்ட தூரம் பயணம் செய்து ரயிலில் ஏற வேண்டியவர்களின் கடைசி நேரம் வரை பதற்றத்துடன் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் கடைசி நேரத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாமல் தவித்தனர்.

இதையும் படிக்க : ஜென்சி தலைமுறையினர் எவ்வாறு பணத்தை செல்வு செய்கின்றனர்?.. சூப்பர் மணி வெளியிட்ட அறிக்கை!

புதிய சார்ட் தயாரிக்கும் நேரம்

புதிய விதிகளின் படி, ரயில் புறப்படும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட சார்ட் தயாரிப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய விதிகளின் படி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்கள், அதற்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு முன்பதிவு சார்ட் தயாரிக்கப்படும்.

அதே போல மதியம் 2.01 மணி முதல் இரவு சரியாக 11.59 மணி வரை செல்லும் ரயில்கள் மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு ரயில் புறப்படுவதற்கு சரியாக 10 மணி நேரத்துக்கு முன் முன்பதிவு சார்ட் தயாரிக்கப்படும்.  இந்த மாற்றத்தின் மூலம், பயணிகள் தங்களின் ரிசர்வேஷன் நிலையை முன்கூட்டியே உறுதிப்படுத்தி, தங்கும் இடம், மாற்று பயண திட்டம் ஆகியவை குறித்து முடிவெடுக்க முடியும்.

இதையும் படிக்க : ஆதார் – பான் இணைக்கவில்லை என்றால் ஜன.1 முதல் இவற்றை செய்ய முடியாது!

ஏன் இந்த மாற்றம்?

கடைசி நேர குழப்பம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொலைதூர கிராமங்களில் இருந்து பயணம் செய்யும் மக்கள், நீண்ட தூர ரயில் பயணிகள் இந்த மாற்றத்தால் பயன் அடைவார்கள் என ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த புதிய சார்ட் தயாரிப்பு நேர விதிமுறையை, உடனடியாக அமல்படுத்த, அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் பிரிவுகளுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.