Year Ender 2025: ஒரே ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் – ரயில் ஒன் செயலியின் ஸ்பெஷல் என்ன?
RailOne App: இந்த 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய மாற்றமாக ரயில் பயணிகளுக்கு அனைத்து வசதிளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ரயில்ஒன் செயலியை அரிமுகப்படுத்தியது. ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட், யுடிஎஸ், என்டிஇஎஸ், ரியி் மடட், இகேட்டரிங் போன்ற பல ஆப்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
பயணிகளின் வசதியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், இந்தியன் ரயில்வே ரயில் ஒன் என்ற புதிய சூப்பர் ஆப்பை அரிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரயில் (Train) பயணிளுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே ஆப்பில் (App) இருந்து மேற்கொள்ளலாம். இதுவரை டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர், ரயில் நிலவரம் அறிதல், லோக்கல் டிரெயின் டிக்கெட், புகார் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு பல்வேறு ஆப்களை பயன்படுத்தி வந்த பயணிகளுக்கு இந்த ரயில் ஒன் செயலி ஒற்றை தீர்வாக அமைந்தது. அதாவது ரயில் பயணம் குறித்த அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும். இதனால் பயணிகள் குழப்பமின்றி தங்கள் பயணங்களை நிர்வகிக்க முடியும்.
ரயில்ஒன் ஆப்பில் கிடைக்கும் முக்கிய சேவைகள்
ரயில் ஒன் ஆப்பில் பயணிகள் கீழ்கண்ட சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- ஐஆர்சிடிசி முன்பதிவு ரயில் டிக்கெட் பதிவு
- முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்
- பிஎன்ஆர் நிலவரம் மற்று் ரயிலின் நிலையை அறிந்துகொள்ளுதல்
- ரயில் பெட்டிகள் இருக்கும் இடத்தின் தகவல்கள்
இதையும் படிக்க : ஜென்சி தலைமுறையினர் எவ்வாறு பணத்தை செல்வு செய்கின்றனர்?.. சூப்பர் மணி வெளியிட்ட அறிக்கை!




இதுவரை, டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர், புகார் பதிவு, ரயில் நிலவரம் அறிதல் உள்ளிட்ட சேவைகளுக்கு பல்வேறு ஆப்புகளை பயன்படுத்தி வந்த பயணிகளுக்கு, ரயில்ஒன் ஆப் ஒரு ஒற்றை தீர்வாக அமையும்.
- பயணிகளின் புகார் மற்றும் பயணத்தின் கருத்து பரிமாற்றம்
- ரயில்வே இ-வாலட் வசதி
- ரயில் தொடர்பான அனைத்து விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
ஒரே லாகின் மூலம் பயன்படுத்தலாம்
இதனால், ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட், யுடிஎஸ், என்டிஇஎஸ், ரியி் மடட், இகேட்டரிங் போன்ற பல ஆப்களை தனித்தனியாக பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த ஆப்பில் ஒரே சைன் இன் மூலம் ஒரே ஒருமுறை லாகின் செய்தால் அனைத்து சேவைகளையும் பெறலாம். ரயில் கனெக்ட், யுடிஎஸ் ஆன் மொபைல் கணக்குகளை நேரடியாக இந்த ரயில்ஒன் ஆப் மூலமே பயன்படுத்திக்கொள்ளலாம். பல பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.
இதையும் படிக்க : Year Ender 2025: இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்ததற்கான காரணம் என்ன? – 2026ல் எப்படி இருக்கும்?
மேலும் இதில் mPIN மற்றும் பயோமெட்ரிக் லாகின் ஆதரவு, புதிய பயனாளர்களுக்கு மிக எளிய பதிவு முறை வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்காக கெஸ்ட் லாகின் வசியும் கிடை்கும். இந்த ஆப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகியவற்றில் இந்த ரயில்ஒன் ஆப் கிடைக்கும். ஒரே ஆப்பில் அனைத்து சேவைகளும் இருப்பதால், பயனாளர்களின் மொபைல் ஸ்டோரேஜ் சேமிப்பு கூட அதிகரிக்கும்.