AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 உட்பட 20 பேர் அமைச்சர்களாகிறார்கள்!

Tamil Nadu Ministers Cabinet Expansion | மே 10, 2026 அன்று தவெக தலைசர் விஜய், தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அவருடன் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், தற்போது மேலும் 20 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்.

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 உட்பட 20 பேர் அமைச்சர்களாகிறார்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 May 2026 07:41 AM IST

சென்னை, மே 21 : தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் சி.ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த அரசில் ஏற்கனவே 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில்,  இன்று (மே 21, 2026) மேலும் சில அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த நிலையில், அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழக அமைச்சரவையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெற உள்ளது.

கூட்டணி, ஆதரவுடன் ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகம்

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளும் 118 என்ற தனி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை பெற்றிருந்த நிலையில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் இணைந்த நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.

இதையும் படிங்க : காவல் துறையில் அதிரடி மாற்றம்.. 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள்.. தமிழக அரசு உத்தரவு!

இந்த நிலையில், பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மே 10,2026 அன்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆட்சி அமைத்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டு என்ற கட்டாயம் தவெகவுக்கு இருந்தது. இந்த நிலையில் தான், அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய நிலையில், 144 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் உறுதியான ஆட்சியை தவெக தக்கவைத்துக்கொண்டது.

இதையும் படிங்க : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம்

தமிழகத்தில் தவெக ஆட்சி நிலையாக உள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று புதியதாக 20 அமைச்சரகள் தவெக அரசில் பொறுப்பேற்க உள்ளனர். தவெகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில், அமைச்சரவை காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளா நிலையில், அவர்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us