இந்தியாவில் விரைவில் பிளாஸ்டி ரூபாய் நோட்டுக்கள்.. உறுதி செய்த ஆர்பிஐ.. எப்போது முதல்?
Plastic Rupee Notes Soon To Introduce In India | இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அதனை உறுதி செய்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் (Plastic Rupee Notes) எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா (Sanjay Malhotra) தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் – ஆர்பிஐ உறுதி
இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் உண்மையானதா அல்லது போலியானதா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த நிலையில் தான், நிதி கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ ஆளுநர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க : Tamil Nadu Budget 2026 Update: தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையை தமிழில் பதிவிறக்கம் செய்வது எப்படி?




2027 – 2028 நிதியாண்டுக்குள் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்
இந்தியாவில் 2027 – 2028 நிதியாண்டுக்குள் பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதாவது, 2027 ஏப்ரல் மாதம் முதல் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் செப்.8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!
இந்த ரூபாய் நோட்டுக்களை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்னதாக அந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவின் தட்பவெப்பநிலை மற்றும் பயன்பாட்டு சூழலுக்கு எவ்வாறு தாக்கு பிடிக்கிறது என்பதை கண்காணிக்க சில சோதனைகளையும் மேற்கொண்டு வருவதாக ஆர்பிஐ ஆளுநர் கூறியுள்ளார்.
ரூ.100 கோடி மதிப்பில் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுக்கள்
இந்தியாவில் முதற்கட்டமாக 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுக்களை பிளாஸ்டிக்கில் அறிமுகம் செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. அதாவது, சுமார் ரூ.100 கோடி மதிப்பில் இந்த 10 மற்றும் 20 ரூபாட் நோட்டுக்களை அறிமுகம் செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.