AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிஜிட்டல் தமிழ்நாடு 2.0.. வாட்ஸ்அப்பில் 275 அரசுச் சேவைகள்.. இ-சேவை 2.0 திட்டம் அறிமுகம்.. பட்ஜெட்டில் மெகா அறிவிப்புகள்!

2026-27 த.வெ.க பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ₹398 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஈ-சேவை மையங்கள் 2.0 ஆக தரம் உயர்த்தப்படும் என்றும், வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் 275 அரசு சேவைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 Aug 2026 13:39 PM IST
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் 2026–2027ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தமிழ்நாட்டை தொழில்நுட்பச் சக்தியாக மாற்றும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரவு செலவுத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்காக ஒட்டுமொத்தமாக ரூ.398 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 / 5
ஈ-சேவை 2.0' & வாட்ஸ்அப்பில் 275 சேவைகள்: பொதுமக்களுக்கு அரசுச் சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் டிஜிட்டல் கட்டமைப்பு தரம் உயர்த்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து ஈ-சேவை மையங்களும் அதிவேக இணைய இணைப்பு மற்றும் கூடுதல் மக்கள் நலச் சேவைகளுடன் 'ஈ-சேவை 2.0' மையங்களாக மேம்படுத்தப்படும். தற்போது 20 துறைகளின் 76 சேவைகளை வழங்கி வரும் 'நம்ம அரசு' WhatsApp Chatbot வசதியானது, இனி 275 அரசு சேவைகளை வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

2 / 5
மாநிலத்தின் நிர்வாகச் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தொழில்நுட்பத் துறையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், விவசாயம், கல்வி, குடிமக்கள் சேவைகள், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் சமூக நலன் ஆகிய முக்கியத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த முன்முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும்.

3 / 5
ஸ்மார்ட் மீட்டர்கள்: சென்னை மாநகரில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் வணிக நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டத்துடன் இணைந்து 'புதிய வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் வீடுகளின் கூரையில் சோலார் பேனல் பொருத்தும் நுகர்வோருக்கு அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

4 / 5
20,000 EV சார்ஜிங் நிலையங்கள்: பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்கங்கள் அமைக்கும் EV சார்ஜிங் நிலையங்களுக்கும் அரசு மானியம் வழங்கும். பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டத்துடன் இணைந்து 'புதிய வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் வீடுகளின் கூரையில் சோலார் பேனல் பொருத்தும் நுகர்வோருக்கு அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5 / 5
Follow Us