AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Budget 2026 Update: தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையை தமிழில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

Tamil Nadu Budget: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026–2027ஆம் நிதியாண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்டத்தை (Budget 2026-2027) நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இதில், கல்வி, சுகாதாரம், மகளிர் நலன், விவசாயம், தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளுக்கும் முக்கிய நிதி ஒதுக்கீடுகளும் புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tamil Nadu Budget 2026 Update: தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையை தமிழில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
அமைச்சர் மரிய வில்சன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 Aug 2026 14:31 PM IST

சென்னை, ஆகஸ்ட் 05: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026–2027ஆம் நிதியாண்டுக்கான மாநில அரசின் வரவு செலவுத் திட்டம் இன்று முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, கல்வி, மகளிர் நலன், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு பல முக்கியத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 LIVE Updates: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அறிவிப்புகள் விவரம்!

இலவச மின்சாரம் 200 யூனிட்டாக உயர்வு:

முதலமைச்சரின் அறிவிப்பிற்கு இணங்க, இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் உயர்த்தப்பட்டுள்ளது. 100-லிருந்து 200 யூனிட்டாக உயர்வு: விலையில்லா மின்சாரத்தின் அளவு 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இத்திருத்த வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 1,545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கான மின் மானியத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ. 18,860 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் TANGEDCO இழப்பீட்டு நிதியாக ரூ. 5,000 கோடி வழங்கப்படுகிறது.

பட்ஜெட் 2026 அறிக்கையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

2026–2027ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் உரை, கொள்கை விளக்கக் குறிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளைப் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்கள் எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு நிதித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://financedept.tn.gov.in/ மூலம் இதனைப் பெறலாம்.

1.அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்:உங்கள் உலாவியில் (Browser) https://financedept.tn.gov.in/ என்ற முகவரியைத் திறந்து, தமிழ்நாடு அரசின் நிதித் துறை முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.

2. பட்ஜெட் பிரிவைத் தேர்வு செய்யவும்:முகப்புப் பக்கத்தில் உள்ள “Budget என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

3. அதில், பட்ஜெட் Speech என்பதை தேர்வு செய்து,பட்ஜெட் ஆவணங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும். அதில் “Budget Speech in Tamil (தமிழ் பட்ஜெட் உரை)” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

4. PDF பதிவிறக்கம் செய்யவும்:இணைப்பைச் சொடுக்கியதும் முழு பட்ஜெட் அறிக்கை PDF வடிவில் திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் (Download) செய்து சேமித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!

மாநில அரசின் வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் இந்த 2026–2027 நிதிநிலை அறிக்கையின் முழுமையான விவரங்களை நிதித் துறையின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

Follow Us