AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக உருவெடுத்தது தவெக!”.. நிலைத்தது ‘விசில்’ சின்னம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

TVK Recognized as Regional State Party: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி என்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கட்சி தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே இந்த மைல்கல்லை தவெக எட்டியுள்ளது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக உருவெடுத்தது தவெக!”.. நிலைத்தது ‘விசில்’ சின்னம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Sep 2026 14:05 PM IST

சென்னை, செப்டம்பர் 10: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் ‘அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி’ என்ற அதிகாரப்பூர்வ அந்தஸ்தை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்கட்சிக்குப் போட்டியிட ஒதுக்கப்பட்ட ‘விசில்’ சின்னமும் தவெகவுக்கே பிரத்யேகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு கட்சி மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டுமெனில், சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 3% இடங்கள் (8 தொகுதிகள்) வெற்றி பெற வேண்டும் அல்லது 6% வாக்கு சதவீதத்தைப் பெற வேண்டும்.

இதையும் படிக்க: “மிசா குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!”.. திருமாவளவன் சொன்ன பரபரப்பு கருத்து!!

அந்த வகையில், தவெக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று, சுமார் 35% வாக்கு சதவீதத்தைக் கைப்பற்றியது. இந்த அபாரமான சாதனையின் அடிப்படையில், தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘விசில்’ சின்னம் பிரத்யேகமாக ஒதுக்கீடு:

மாநிலக் கட்சி அந்தஸ்து கிடைத்ததைத் தொடர்ந்து, தவெக போட்டியிட்ட ‘விஸில்’ சின்னம் இனி வேறு எந்தக் கட்சிக்கும் அல்லது சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட மாட்டாது. இச்சின்னம் முழுமையாக தவெகவுக்கே சொந்தமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மின்னஞ்சல் மூலமாக தவெக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் மற்றும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற்றிருந்தன. தற்போது அந்தப் பட்டியலில் தவெகவும் இணைந்துள்ளது.

மாநிலக் கட்சி அந்தஸ்தின் பலன்கள்:

அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக மாறுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன. அதன்படி, கட்சி போட்டியிடும் அனைத்துத் தேர்தல்களிலும் ‘விசில்’ சின்னம் பிரத்யேகமாக அக்கட்சிக்கே ஒதுக்கப்படும். தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்களிலும், விதிமுறை மாற்றங்கள் தொடர்பான விவாதங்களிலும் தவெக அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கும் உரிமை பெறும்.

தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தற்போது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவின் இந்த வளர்ச்சி, தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.

ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டம்:

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தலைமை நிலையச் செயலகத்தில் திரண்ட நிர்வாகிகள், கட்சித் தலைவரின் தொலைநோக்குப் பார்வைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவெனக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் பணத்துக்காக பிரசவம் தடுத்து நிறுத்தம்.. தாய்-சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. குழந்தை வெளியேறியநிலையில் கொடூரம்!

எதிர்கால தேர்தல் களம் மற்றும் அரசியல் தாக்கம்:

தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதன் மூலம், வரும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தவெக தனது அதிகாரப்பூர்வ ‘விசில்’ சின்னத்தில் தனித்து நிற்கும் பலத்தையும், தேர்தல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் தங்களது முகவர்களை அதிகாரப்பூர்வமாக நியமிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது. குறைந்த காலத்திலேயே இந்த இலக்கை அடைந்துள்ள தவெகவின் இந்த எழுச்சி, தமிழகத்தின் எதிர்கால அரசியல் நிலப்பரப்பில் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us