AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND W vs AUS W: இந்திய அணிக்கு தகர்ந்த உலகக் கோப்பை கனவு.. விலகுகிறாரா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்?

Harmanpreet Kaur: அரையிறுதிக்குத் தகுதிபெற, இந்திய மகளிர் அணி நேற்று அதாவது 2026 ஜூன் 29ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டியிருந்தது. ஆனால், 170 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எடுத்தபோதிலும், இந்திய மகளிர் அணியால் அந்த ஸ்கோரைப் பாதுகாக்க முடியாமல் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

IND W vs AUS W: இந்திய அணிக்கு தகர்ந்த உலகக் கோப்பை கனவு.. விலகுகிறாரா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்?
ஹர்மன்ப்ரீத் கவுர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jun 2026 16:36 PM IST

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. அரையிறுதிப் போட்டியை எட்டுவதற்கு முன்பே இந்திய மகளிர் அணியின் (Indian Womens Cricket Team) பயணம் முடிவுக்கு வந்தது. ‘ஏ’ பிரிவில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்ததால், நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான சிறப்பான வெற்றிகளுடன் தங்கள் பயணத்தைத் தொடங்கிய இந்திய அணி, 3வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது. பின்னர், ஓல்ட் டிராஃபோர்டில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டியை எட்டும் தங்கள் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு (Australia Womens Cricket Team) எதிரான தோல்விக்குப் பிறகு அனைத்தும் மாறிவிட்டது. தற்போது, ​​இந்தத் தோல்விக்குப் பிறகு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்ற பேச்சு அடிபடுகிறது. தற்போது இதுகுறித்து பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ALSO READ: 3 ஆண்டுகள்.. 73 போட்டிகள்.. தொடங்கிய இடத்தில் முடிந்த இந்திய அணியின் பயணம்..!

கேப்டனாக தொடர்வாரா?

அரையிறுதிக்குத் தகுதிபெற, இந்திய மகளிர் அணி நேற்று அதாவது 2026 ஜூன் 29ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டியிருந்தது. ஆனால், 170 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எடுத்தபோதிலும், இந்திய மகளிர் அணியால் அந்த ஸ்கோரைப் பாதுகாக்க முடியாமல் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரிலிருந்து இந்திய மகளிர் அணியினர்  வெளியேறிய பிறகு, தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார், ‘கிரிக்கெட்டின் தாயகம்’ என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அந்தச் சந்திப்பின்போது, ​​ஹர்மன்பிரீத் இந்திய மகளிர் அணியின் கேப்டனாகத் தொடர்வாரா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த மஜும்தார், “முடிவு தேர்வுக் குழுவால் எடுக்கப்படும், ஆனால் ஹர்மன்பிரீத் கேப்டனாகத் தொடர்வார் என நம்புவதாகக் கூறினார். யார் கேப்டனாக இருப்பார் என்பதை முடிவு செய்வது தேர்வுக் குழுவின் பணி. இனிவரும் காலங்களில் இந்தியாவின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் கணிசமாக மேம்பட வேண்டும். அதேநேரத்தில், பேட்ஸ்மேன்கள் இன்னும் சற்று ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்.” என்றார்.

ALSO READ: வென்ற ஆஸ்திரேலியா.. உலகக் கோப்பையில் வெளியேறிய இந்தியா!

போட்டியில் நடந்தது என்ன?

முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி ஹர்மன்பிரீத் கவுரின் 56 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய ஆஸ்திரேலியா, எல்லிஸ் பெர்ரியின் 56 ரன்கள் மற்றும் ஆஷ்லி கார்ட்னரின் ஆட்டமிழக்காத 53 ரன்கள் உதவியுடன், 4 விக்கெட்டுகளை இழந்து 19வது ஓவரில் இலக்கை எட்டியது. இந்திய அணி கடந்த 2025ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருந்தது. ஆனால், இப்போது டி20 உலகக் கோப்பையை வெல்லும் கனவு நிறைவேறாமல் உள்ளது.

Follow Us