AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: டி20 போட்டிகளில் அதிக அறிமுக வீரர்கள்.. புதிய சாதனை பட்டியலில் இந்திய அணி!

Indian Cricket Team: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி 125 அறிமுகங்களுடன் அதிக அறிமுக வீரர்களைக் கொண்ட அணியாகத் திகழ்கிறது. சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தங்களது டி20 அறிமுகப் போட்டியில் விளையாடியதைத் தொடர்ந்து, இந்தியா 121 வீரர்களுடன் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Team India: டி20 போட்டிகளில் அதிக அறிமுக வீரர்கள்.. புதிய சாதனை பட்டியலில் இந்திய அணி!
இந்திய அணிக்கான அறிமுகமான வீரர்கள்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jun 2026 19:15 PM IST

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு (IND vs IRE) இடையேயான 2வது டி20 போட்டியும் பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தீர்மானித்தது. 15 வயதான அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்றும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) 2 வீரர்களுக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகும் வாய்ப்பை கொடுள்ளார்.  அதன்படி, வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஆகியோர் இன்றைய டி20 சர்வதேச அறிமுக அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டியில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் செயல்பட்ட பிரசித் கிருஷ்ணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இன்று விளையாடவில்லை.

ALSO READ: மழை பெய்தால் தோல்விதான்.. அச்சத்தில் இந்திய அணி.. வானிலை விவரம் என்ன?

சிறப்பு வாய்ந்த எண்கள்:

சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் முறையே தங்களது 120வது மற்றும் 121வது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான வீரர்கள் ஆனார்கள். இதன்மூலம், டி20 வடிவத்தில் அதிக அறிமுக வீரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக சூர்யான்ஷ் ஷெட்ஜ் சேர்க்கப்பட்டார் . பிரின்ஸ் யாதவ் சில நாட்களுக்கு முன்புதான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக அறிமுக வீரர்களைக் கொண்ட உலக சாதனையை பாகிஸ்தான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முதலிடம்:

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி 125 அறிமுகங்களுடன் அதிக அறிமுக வீரர்களைக் கொண்ட அணியாகத் திகழ்கிறது. சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தங்களது டி20 அறிமுகப் போட்டியில் விளையாடியதைத் தொடர்ந்து, இந்தியா 121 வீரர்களுடன் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ALSO READ: கேப்டனாக முதல் போட்டியில் தோல்வி.. மோசமான சாதனை பட்டியலில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

சூர்யான்ஷ் மற்றும் பிரின்ஸுக்கு முன்பு, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமான கடைசி வீரர் ஹர்ஷித் ராணா ஆவார். கடைசியாக கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். அன்று முதல், ஹர்ஷித் 10 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளார். ஹர்ஷித் ராணா அறிமுகமாகி 513 நாட்களுக்குப் பிறகு, இந்தியா ஒரு வீரருக்கு டி20 அறிமுக தொப்பியை வழங்கியுள்ளது.

Follow Us