AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு தலை காதலால் வந்த வினை.. கோவையில் வாலிபரின் அதிர்ச்சி முடிவு.. பரபரப்பு பின்னணி!

Coimbatore Crime: கோயம்புத்தூர் மாவட்டத்தில் காதல் தோல்வியால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தலை காதலால் வந்த வினை.. கோவையில் வாலிபரின் அதிர்ச்சி முடிவு.. பரபரப்பு பின்னணி!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Jun 2026 17:27 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய் ( 24 வயது). இவர், கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரில் தங்கி இருந்து சூலூர் பகுதி காங்கேயம் பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதே நிறுவனத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, சஞ்சய் மற்றும் அந்த பெண் இடையை பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரே அலுவலகத்தில் இருவரும் பணிபுரிவதால் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை சஞ்சய் காதலிக்க தொடங்கி உள்ளார். இதனை, அந்த பெண்ணிடம் அண்மையில் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஆனால், இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் சஞ்சய்யின் காதலை ஏற்க மறுத்ததுடன், இதுபோன்ற எண்ணத்தில் தன்னிடம் பழக வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால், சஞ்சய் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை முடிவை கையிலெடுத்த இளைஞர்

இது தொடர்பாக சஞ்சய் தனது நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்க்கும் நெருங்கிய ஊழியர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். அவருக்கு, நண்பர்கள் தரப்பினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இருந்தாலும், அந்த பெண் தனது காதலை ஏற்க மறுத்த விவகாரத்தில் இருந்து சஞ்சய் முழுவதுமாக வெளியே வரவில்லையாம். இதனால், வாழ்வில் விரக்தி அடைந்த சஞ்சய் சம்பவத்தன்று திடீரென விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில், சஞ்சய் மயக்கம் அடைந்து கிடந்தார்.

மேலும் படிக்க: MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்:

சிகிச்சை பலன் இன்றி பிரிந்த உயிர்

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த போலீசார் சஞ்சயை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து சஞ்சய் பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, சம்பவ இடத்தில் அவருடன் தங்கி இருந்த நபர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த நபர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் சஞ்சய் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

மேலும் படிக்க: உளறல்நிதியின் மற்றொரு நாள்.. மற்றுமொரு உளறல் – த.வெ.க ஐ.டி விங் தாக்கு..

Follow Us