AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உளறல்நிதியின் மற்றொரு நாள்.. மற்றுமொரு உளறல் – த.வெ.க ஐ.டி விங் தாக்கு..

தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "உளறல்நிதியின் மற்றொரு நாள்... மற்றுமொரு உளறல்" என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், தீயசக்தி தி.மு.க.வின் கட்சிக்காரர்களும், திருட்டு மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார சுருட்டல்களில் சிக்கி வருவதால், தாங்கள் கண்டபடி purchase செய்த funds எல்லாம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளறல்நிதியின் மற்றொரு நாள்.. மற்றுமொரு உளறல் – த.வெ.க ஐ.டி விங் தாக்கு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jun 2026 16:57 PM IST

ஜூன் 29, 2026: அதிமுக தரப்பில் தற்போது வரை ஆறு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கடுமையாக விமர்சிக்கும் வகையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தொடர்ந்து எம்எல்ஏக்களை பர்ச்சேஸ் செய்வது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “உளறல்நிதியின் மற்றொரு நாள்… மற்றுமொரு உளறல்” என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உளறல்நிதியின் மற்றொரு நாள் – த.வெ.க ஐ.டி விங் தாக்கு:

இது தொடர்பான அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து தாங்கள் செய்த ஒட்டகப் பேரம் நினைவுக்கு வந்து உறுத்துகிறதுபோலும்.

மேலும் படிக்க: MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..

புதிதாகத் தொடங்கியுள்ள Sofa, Table, Chair, Teapoy வியாபாரத்தை மக்களிடம் பதியவைக்கவே Sofa Model என்று சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். தன் வியாபாரம் செல் எடுக்காமல் சிதறிப் பதறுகிறார். Extreme-ஆக vex ஆகி விரக்தியைக் கொட்டுகிறார்.

தீயசக்தி தி.மு.க.வின் கட்சிக்காரர்களும், திருட்டு மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார சுருட்டல்களில் சிக்கி வருவதால், தாங்கள் கண்டபடி purchase செய்த funds எல்லாம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார்.

Script-ஐ நம்பி வாழும் இந்த ஸ்கிரிப்ட்நிதி:

மூச்சுவிடக்கூட Script-ஐ நம்பி வாழும் இந்த ஸ்கிரிப்ட்நிதி, ஆட்சியைப் பிடிக்க மறைமுகமாகத் திட்டமிட்டுத் தொட்ட கதையும், தொட முயன்று தோற்ற கதையும் அம்பலமாகுமோ என்று பதறுகிறார்.

பற்பல லிங்கங்களையும், பல்வேறு செல்வங்களையும் vending machine-ல் போட்டு வெளுத்த தி.மு.க.வை, மக்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெளு வெளுவென வெளுக்கப் போவது உறுதி.”

Follow Us