Team India: மும்பைக்கு நோ! நோ! பெங்களூருக்கு செல்லும் ஹர்திக் பாண்ட்யா.. காரணம் என்ன?
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா தனது வீட்டிலிருந்து தினமும் பயிற்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று வருவது கடினமாக இருந்ததால், சில காலமாக மும்பைக்கு வெளியே குடியேறுவது குறித்து யோசித்து வந்தார். எனவே, அவர் பெங்களூருக்கு மாற முடிவு செய்து, அங்கு நகரத்திற்கு வெளியே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பையை விட்டு பெங்களூருவுக்கு செல்கிறார். அதாவது ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில்லை. மாறாக, ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) மும்பை நகரை விட்டு பெங்களூருவுக்குச் சென்றுள்ளார். கிடைத்த தகவலின்படி, காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடியும் வரை பெங்களூருவிலேயே தங்க முடிவு செய்துள்ளார்.
ஹர்திக் மும்பைக்கு குடியேற காரணம் என்ன?
காயம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து விலக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, முழு உடற்தகுதியை மீண்டும் பெறுவதற்காக கடந்த சில நாட்களாக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் (CoE) பயிற்சி செய்து வருகிறார். இந்த உடற்தகுதித் தேவையின் காரணமாக, ஹர்திக் தற்போது மும்பையை விட்டு பெங்களூருவில் குடியேற முடிவு செய்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் நலனுக்காக ஹர்திக் பாண்ட்யா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் இவ்வாறு செய்யும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.




இந்திய அணியில் இருந்து விரைவில் ஓய்வா..?
பெங்களூருவில் உள்ள CoE-யின் பயிற்சி வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஹர்திக் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா, பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக உள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, உடற்பயிற்சி, புனர்வாழ்வு, மருத்துவம் மற்றும் கிரிக்கெட் பயிற்சி போன்ற முக்கிய வசதிகள் உட்பட, CoE-யில் உள்ள அனைத்து வசதிகளையும் ஹர்திக் பாண்ட்யா எப்போது வேண்டுமானாலும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். குறைந்தது அடுத்த 5-6 ஆண்டுகளுக்காவது இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஹர்திக்கின் இலக்கை எட்டுவதற்காக, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடியும் வரை CoE-யை தனது பயிற்சித் தளமாக ஹர்திக் பாண்ட்யா மாற்ற திட்டமிட்டுள்ளார்.
ALSO READ: 15 ஆண்டுகளுக்குப் பிறகு! டர்ஹாமில் களமிறங்கும் இந்திய அணி.. செயல்திறன் இதுவரை எப்படி?
கிடைத்த தகவல்களின்படி, ஹர்திக் பாண்ட்யா தனது வீட்டிலிருந்து தினமும் பயிற்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று வருவது கடினமாக இருந்ததால், சில காலமாக மும்பைக்கு வெளியே குடியேறுவது குறித்து யோசித்து வந்தார். எனவே, அவர் பெங்களூருக்கு மாற முடிவு செய்து, அங்கு நகரத்திற்கு வெளியே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அது சிறப்பு மையத்திற்கு (CoE) மிக அருகில் இருப்பதால், ஹர்திக் பாண்ட்யா தினமும் பயிற்சி செய்வது எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். இது அவரது பயிற்சி நேரத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடற்தகுதி சோதனைகள் மற்றும் பிற பிசிசிஐ பயிற்சி முகாம்களில் அடிக்கடி கலந்துகொள்வதையும் எளிதாக்கும்.