AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து போட்டிகள் எப்போது, ​​எந்த நேரத்தில் தொடங்கும்? முழு அட்டவணையும் இதோ!

IND VS ENG Live Streaming Time: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல், 3வது மற்றும் 4வது டி20 போட்டிகள் இரவு 10:00 மணிக்குத் தொடங்கும். அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். இந்தியா-இங்கிலாந்து போட்டி சோனி LIV செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து போட்டிகள் எப்போது, ​​எந்த நேரத்தில் தொடங்கும்? முழு அட்டவணையும் இதோ!
இந்தியா - இங்கிலாந்து டி20 அட்டவணை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Jun 2026 15:01 PM IST

அயர்லாந்துக்கு (IND vs IRE) எதிரான டி20 தொடரில் இந்திய அணி (Indian Cricket Team) ஏமாற்றமளிக்கும் வகையில் தொடரை முழுமையாக இழந்தது. இப்போது, ​​இங்கிலாந்தை எதிர்கொள்ளும்போது மீண்டு எழுவதற்கு இந்திய அணிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகின்ற 2026 ஜூலை 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி நாளை அதாவது 2026 ஜூலை 1ம் தேதிசெஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்த பிறகு இந்தியா இந்தத் தொடரில் களமிறங்குகிறது. இதற்கிடையில், இங்கிலாந்தும் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ALSO READ: இந்திய அணியை தோற்கடிக்க மாஸ்டர் பிளான்.. திடீரென பதவி விலகிய அயர்லாந்து பயிற்சியாளர்.. காரணம் என்ன?

இவ்விரு அணிகளும் கடைசியாக 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் மோதின. அந்தப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி, தங்களது சொந்த மண்ணில் அந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு இந்திய அணியை பழிவாங்க கடுமையாக போராடும்.  இந்தநிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் எங்கு நடைபெறும், எத்தனை மணிக்கு தொடங்கும் உள்ளிட்ட முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வோம்.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 அட்டவணை:

  • முதல் டி20 போட்டி – 2026 ஜூலை 1 – ரிவர்சைடு மைதானம், செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்
  • 2வது டி20 போட்டி – 2026 ஜூலை 4 – ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
  • 3வது டி20 போட்டி – 2026 ஜூலை 7 – டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
  • 4வது டி20 போட்டி – 2026 ஜூலை 9 – பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
  • 5வது டி20 போட்டி – 2026 ஜூலை 11 – ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல், 3வது மற்றும் 4வது டி20 போட்டிகள் இரவு 10:00 மணிக்குத் தொடங்கும். அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். இந்தியா-இங்கிலாந்து போட்டி சோனி LIV செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அதே சமயம், 5 போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

ALSO READ: வைபவ் சூர்யவன்ஷி அணியில் எந்த இடத்தில் களமிறங்குவார்..? கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஏற்பட்ட ஏமாற்றமான தோல்விக்குப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மீண்டு வர கடுமையாக போராடும். இங்கிலாந்தும், தங்களது சொந்த மண்ணில், இந்தியாவிற்கு ஒரு கடுமையான சவாலை அளிக்க இலக்கு வைக்கும். இதன் விளைவாக, இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். இனி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியால் வலுவான மீள்வருகையை நிகழ்த்த முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us