AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs IRE: இந்திய அணியை தோற்கடிக்க மாஸ்டர் பிளான்.. திடீரென பதவி விலகிய அயர்லாந்து பயிற்சியாளர்.. காரணம் என்ன?

Ireland Coach Resign: பயிற்சியாளராக மாலன் கடந்த 2022-ல் அயர்லாந்து அணியில் சேர்ந்தார். அன்று முதல், அயர்லாந்து 4 ஆண்டுகளில் நடைபெற்ற 3 டி20 உலகக் கோப்பைகளுக்கும் தகுதி பெற்றது. இதுமட்டுமின்றி, 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். 2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

IND vs IRE: இந்திய அணியை தோற்கடிக்க மாஸ்டர் பிளான்.. திடீரென பதவி விலகிய அயர்லாந்து பயிற்சியாளர்.. காரணம் என்ன?
முன்னாள் அயர்லாந்து பயிற்சியாளர் மாலன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jun 2026 20:03 PM IST

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு (IND vs IRE) இடையேயான டி20 தொடரின் முடிவு கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது. 3 முறை டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணியை, அயர்லாந்து அணி ஒரு டி20 தொடரில் முதல் முறையாக 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றி அயர்லாந்து முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொடரை வென்ற ஒரு நாள் கழித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவரே இந்திய அணிக்கு (Indian Cricket Team) எதிரான டி20 தொடரில் அயர்லாந்து ஒயிட் வாஷ் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

ALSO READ: 3 ஆண்டுகள்.. 73 போட்டிகள்.. தொடங்கிய இடத்தில் முடிந்த இந்திய அணியின் பயணம்..!

ராஜினாமா செய்த அயர்லாந்து பயிற்சியாளர் மாலன்..

அயர்லாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹென்ரிக் மாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை கிரிக்கெட் அயர்லாந்து சமூக ஊடகப் பதிவு ஒன்றில் இதை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்து, அயர்லாந்து ஒரு புதிய பயிற்சியாளரையும் அறிவித்துள்ளது.

இந்தியாவை வீழ்த்திய அயர்லாந்து:

2026 ஜூன் 28ம் தேதியான இன்று பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி, இந்தியாவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட தொடரை அயர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இது அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தொடர் வெற்றியாகும். அயர்லாந்து கிரிக்கெட் அணியும், அதன் ரசிகர்களும், உள்ளூர் ஊடகங்களும் இந்த வெற்றியைக் கொண்டாடி வந்த நிலையில், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அதாவது 2026 ஜூன் 29ம் தேதியான இன்று, பயிற்சியாளர் ஹென்ரிச் மாலனின் ராஜினாமா செய்தி வெளியானது.

கிரிக்கெட் அயர்லாந்தின்படி, மாலனின் ஒப்பந்தம் 2027 வரை இருந்தது, ஆனால் அவர் முன்கூட்டியே ராஜினாமா செய்ய முடிவு செய்தார். இதற்குக் காரணம், புதிய பயிற்சியாளருக்குத் தேவைப்படும் கால அவகாசமே ஆகும்.

பயிற்சியாளராக மாலன் சாதனை:

பயிற்சியாளராக மாலன் கடந்த 2022-ல் அயர்லாந்து அணியில் சேர்ந்தார். அன்று முதல், அயர்லாந்து 4 ஆண்டுகளில் நடைபெற்ற 3 டி20 உலகக் கோப்பைகளுக்கும் தகுதி பெற்றது. இதுமட்டுமின்றி, 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். 2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். அண்மையில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிராகவும் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. உலக சாம்பியனான இந்தியாவை 2-0 என்ற கோல் கணக்கில் முழுமையாக வீழ்த்திய ஒரு மறக்க முடியாத வெற்றியுடன் மாலனின் பயணம் நிறைவடைந்தது.

ALSO READ: வைபவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை..? காரணத்தை சொன்ன இந்திய பயிற்சியாளர்!

அயர்லாந்தின் புதிய பயிற்சியாளர் யார்..?

மாலனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அயர்லாந்து புதிய பயிற்சியாளரை அறிவித்துள்ளது. முன்னாள் அயர்லாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான கேரி வில்சனை புதிய தலைமைப் பயிற்சியாளராக வாரியம் நியமித்துள்ளது. சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற 40 வயதான வில்சன், அயர்லாந்து அணிக்காக 105 ஒருநாள் போட்டிகள், 85 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, கிட்டத்தட்ட 3,400 ரன்களைக் குவித்துள்ளார். 2022 முதல் அயர்லாந்தின் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த வில்சன், இப்போது அயர்லாந்து அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பை ஏற்பார். கடந்த 30 ஆண்டுகளில் அயர்லாந்து அணிக்காக அயர்லாந்து முதல் பயிற்சியாளர் இவரே ஆவார்.

Follow Us