AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: 200 ரன்கள் குவித்தும் அதிக தோல்வி.. மோசமான சாதனை படைத்த பஞ்சாப்!

Punjab Kings Unwanted Record: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவும் மோசமான சாதனைப் பதிவைக் கொண்டுள்ளது. இது பஞ்சாப் அணியின் பந்துவீச்சு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. 200-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்திருந்த போதிலும், ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணி 9 முறை தோல்வியை தழுவியுள்ளது.

IPL 2026: 200 ரன்கள் குவித்தும் அதிக தோல்வி.. மோசமான சாதனை படைத்த பஞ்சாப்!
பஞ்சாப் கிங்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 May 2026 17:33 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 11ம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals) அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய டெல்லி அணி 19 ஓவர்களில் 211 ரன்களை கடந்து வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிலைமை கண் இமைக்கும் நேரத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஐபிஎல் 2026 சீசனின் தொடக்கத்தில் முதல் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, தற்போது சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராகப் படுதோல்வியைச் சந்தித்த பஞ்சாப் அணி, ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. தொடர்ச்சியாக 4வது தோல்வியைச் சந்தித்ததன் மூலம் பஞ்சாப் அணியின் நிலைமை மேலும் மோசமடைந்தது.

ALSO READ: முந்திச்சென்ற டெல்லி.. சிஎஸ்கே நிலைமை என்ன?.. ஐபிஎல் புள்ளி பட்டியல் லேட்டஸ்ட்!

டெல்லி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி:

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. பஞ்சாப் அணிக்காக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார். தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யாவும் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 33 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். கூப்பர் கானலியும் 28 பந்துகளில் 38 ரன்கள் குவித்து, அணி 210 ரன்களை எட்ட உதவினார்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லியின் முதல் 4 பேட்ஸ்மேன்களை வெறும் 74 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தனர். இருப்பினும், அக்சர் படேலும் டேவிட் மில்லரும் பஞ்சாபின் நம்பிக்கையை விரைவாகத் தகர்த்தனர். அக்சர் படேல் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 56 ரன்கள் எடுத்தார். மில்லரும் அரைசதம் அடித்ததன் மூலம், டெல்லி அணி வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

ALSO READ: ஐபிஎல்லில் விதிமீறல்! ஒரே தவறு.. வரிசையாக சிக்கிய 6 கேப்டன்கள்..!

மோசமான சாதனயை படைத்த பஞ்சாப்:

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவும் மோசமான சாதனைப் பதிவைக் கொண்டுள்ளது. இது பஞ்சாப் அணியின் பந்துவீச்சு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. 200-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்திருந்த போதிலும், ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணி 9 முறை தோல்வியை தழுவியுள்ளது. இது எந்தவொரு அணிக்கும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். 200-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்திருந்த போதிலும் 7 முறை தோற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2வது இடத்திலும், 6 தோல்விகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது இடத்திலும் உள்ளது.

Follow Us