IPL 2026: 600க்கு மேற்பட்ட போலி இணையதளங்கள்.. ஜோராக விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
IPL Fake Tickets: ஐபிஎல் தொடங்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே, டொமைன்களைப் பதிவுசெய்து சமூக ஊடகப் பக்கங்களை அமைத்து, தங்கள் வேலையை தொடங்குகிறார்கள். நட்சத்திர வீரர்கள் இடம்பெறும் மற்றும் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே அல்லது சிஎஸ்கே - எம்ஐ போன்ற முக்கியப் போட்டிகள்தான் மோசடிக்காரர்களின் முதல் இலக்கு.
ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) இந்தியாவில் பல நகரங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. போட்டி எந்த மைதானத்தில் நடந்தாலும், ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. தங்களுக்குப் பிடித்தமான கிரிக்கெட் வீரர்களையும், விறுவிறுப்பான போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால் ரசிகர்கள் ஏமாற்றமடைகிறார்கள். இருப்பினும், பல வெப் சைட்களை பயன்படுத்தி சிலர் போலியான ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் இன்று அதாவது 2026 மே 13ம் தேதி ஆர்சிபி (RCB) மற்றும் கேகேஆர் (KKR) (RCB – KKR) அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தபோது, இவை அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு சில இணையதளத்தில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு இருப்பதாக கண்டறிந்து, மக்கள் வாங்க முற்பட்டனர். கடைசி அதுவும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
ALSO READ: அணியுடன் லக்னோவிற்கு கிளம்பும் தோனி.. சிஎஸ்கே CEO கொடுத்த ஹிண்ட்!




600க்கும் மேற்பட்ட போலி டொமைன்கள்:
கிடைத்த தகவலின்படி, ஐபிஎல் போட்டிகளுக்கான போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்து மக்களை ஏமாற்றும் 600-க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. டிக்கெட்டுகளை வாங்கி மைதானத்திற்கு வந்த பிறகே இது தெரியவந்துள்ளது. உண்மையில், இந்தத் தளங்களில் பணம் செலுத்திய பிறகும், உங்களுக்கு ஒரு போலி டிக்கெட்டே வழங்குகிறது. இந்த போலி இணையதளங்களின் தளவமைப்பு, வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவை தொழில்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் இந்த மோசடி இணையதளங்களால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள்.
போலி டொமைன்கள் மட்டுமின்றி, உங்கள் தரவைத் திருடும் 400-க்கும் மேற்பட்ட இலவச ஸ்ட்ரீமிங் தளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த போலித் தளங்கள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தேடல் மேலோட்டங்கள் மூலமாகவும் அணுகப்பட்டு வந்துள்ளன. மேலும், இந்தத் தளங்கள் நிகழ்நேர முன்பதிவுத் தரவுகள், கைமுறையான கட்டணச் சரிபார்ப்பு, விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒரே கிளிக்கில் போலி டிக்கெட்டுகளை உருவாக்கும் வசதி ஆகியவற்றை வழங்கியதாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பெரிய போட்டிகளே இலக்கு:
ஐபிஎல் தொடங்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே, டொமைன்களைப் பதிவுசெய்து சமூக ஊடகப் பக்கங்களை அமைத்து, தங்கள் வேலையை தொடங்குகிறார்கள். நட்சத்திர வீரர்கள் இடம்பெறும் மற்றும் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் ஆர்சிபி – சிஎஸ்கே அல்லது சிஎஸ்கே – எம்ஐ போன்ற முக்கியப் போட்டிகள்தான் மோசடிக்காரர்களின் முதல் இலக்கு. அதன்பிறகு, எஸ்எம்எஸ், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மக்களைத் தொடர்புகொள்கிறார்கள். ஐபிஎல் முடிந்த பிறகு, இந்த சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கப்பட்டு, வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
ALSO READ: கொல்கத்தாவிற்கு வாழ்வா? சாவா? குழி பறிக்குமா பெங்களூரு? ஹெட் டூ ஹெட் விவரம்!
இந்த போலி இணையதளங்கள், ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்கும் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதில், நீங்கள் பணம் செலுத்திய பிறகு, உங்கள் டிக்கெட்டின் PDF-ஐ அனுப்பும். ஆனால் மைதானத்திற்கு வந்த பிறகுதான் அந்த டிக்கெட் போலியானது என்றும் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள் என்றும் உணர்கிறீர்கள்.