IPL 2026: அணியுடன் லக்னோவிற்கு கிளம்பும் தோனி.. சிஎஸ்கே CEO கொடுத்த ஹிண்ட்!
CSK MS Dhoni: எம்.எஸ். தோனி அணியுடன் லக்னோவுக்குப் பயணிக்கக்கூடும் என சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது . கால் தசை காயத்தால் அவதிப்படும் தோனி, இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும், சிஎஸ்கேவின் வெளியூர் போட்டிகளுக்காக, ஒருமுறை ஹைதராபாத்துக்கும், ஒருமுறை மும்பைக்கும் என 2 முறை மட்டுமே தோனி அணியுடன் பயணம் செய்துள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியையும், 5ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால், இந்த 11 போட்டிகளில் எம்.எஸ்.தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாதது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, காயம் காரணமாக எம்.எஸ் தோனி சிஎஸ்கே அணியில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும், அவரது ஆட்டம் குறித்த சமீபத்திய தகவல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் தோனி (MS Dhoni) விளையாடுவாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா குறித்தும் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை அதாவது 2026 மே 14ம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஹர்திக் இன்னும் இணையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ALSO READ: கொல்கத்தாவிற்கு வாழ்வா? சாவா? குழி பறிக்குமா பெங்களூரு? ஹெட் டூ ஹெட் விவரம்!
லக்னோவுக்குப் பயணம் செய்யும் எம்.எஸ்.தோனி:
எம்.எஸ். தோனி அணியுடன் லக்னோவுக்குப் பயணிக்கக்கூடும் என சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது . கால் தசை காயத்தால் அவதிப்படும் தோனி, இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும், சிஎஸ்கேவின் வெளியூர் போட்டிகளுக்காக, ஒருமுறை ஹைதராபாத்துக்கும், ஒருமுறை மும்பைக்கும் என 2 முறை மட்டுமே தோனி அணியுடன் பயணம் செய்துள்ளார். தற்போது, அவரது லக்னோ பயணம் குறித்த செய்தி வெளிவருகிறது.




சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பு விளக்கம்:
லக்னோ செல்லும் இண்டிகோவின் வர்த்தக விமானத்தில் தோனி உட்பட மொத்தம் 60 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வருகின்ற 2026 மே 15ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவில் மோதவுள்ள நிலையில், தோனியால் அங்கு பயணிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக விளையாடுவாரா..?
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தர்மசாலாவுக்குப் பயணிக்கவில்லை என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. முதுகுத் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது, அணியுடன் தர்மசாலாவுக்குச் செல்லாததால், நாளை அதாவது 2026 மே 14ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியையும் ஹர்திக் பாண்ட்யா தவறவிடலா,. இருப்பினும், இதற்கிடையில், அவரது காயத்திற்குப் பிறகு முதல் முறையாக, அவர் பேட்டிங் பயிற்சி செய்யும் படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த போட்டியின்போதும், ஹர்திக் அணியுடன் ராய்ப்பூருக்குப் பயணிக்கவில்லை. அவர் தாமதமாக அணியில் இணைந்தார். ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.
ALSO READ: முதலிடத்தில் குஜராத்.. சிஎஸ்கே 5 வது இடத்தில்.. ஐபிஎல் புள்ளி பட்டியல்!
ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மோசமான ஆட்டத்தினால், மும்பை இந்தியன்ஸ் புள்ளி அட்டவணையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளனர். மேலும் பிளேஆஃப் சுற்றுக்கான தகுதிப் போட்டியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.