IPL 2026: பிளே ஆஃப் பயணத்தை தக்க வைக்குமா KKR..? GTக்கு எதிராக இன்று மோதல்..!
KKR vs GT: நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் இந்த இரு அணிகளும் கடைசியாக மோதியபோது, குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் 181 ரன்கள் என்ற இலக்கை 19.4 ஓவர்களில் துரத்திப் பிடித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2026) 19வது சீசனின் 60வது போட்டியில் இன்று அதாவது 2026 மே 16ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் இந்த இரு அணிகளும் கடைசியாக மோதியபோது, குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் 181 ரன்கள் என்ற இலக்கை 19.4 ஓவர்களில் துரத்திப் பிடித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: ஐபிஎல் 2026 முடிந்ததும் கேப்டன் பதவியை இழக்கப்போகும் 3 வீரர்கள்? காரணம் என்ன?
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ரிப்போர்ட்:
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் டாஸ் வெல்லும் அணி பொதுவாக ரன் சேஸிங்கையே விரும்பும். இங்கு நடைபெறும் டி20 போட்டிகளில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் சுமார் 163 ஆகும். கடந்த டி20 போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 19.4 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், குஜராத் அணி அதிகபட்சமான 4 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ப்ளேயிங் லெவன்:
அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), பில் ஆலன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மணீஷ் பாண்டே, ரிங்கு சிங், ரோவ்மேன் பவல், சுனில் நரைன், அனுகுல் ராய், வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி.
இம்பாக்ட் வீரர்: சவுரப் துபே.
குஜராத் டைட்டன்ஸ் ப்ளேயிங் லெவன்:
சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ராகுல் தெவாடியா, ரஷித் கான் , அர்ஷத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ் .
இம்பாக் வீரர்: பிரசித் கிருஷ்ணா.
ALSO READ: இன்னும் 3 போட்டிகளே.. சிஎஸ்கே பிளே ஆஃப் செல்லுமா..? சமன்பாடு என்ன..?
கேகேஆர் மற்றும் ஜிடி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியின் கணிப்பு:
ஐபிஎல் 2026 சீசனின் 60வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.