Hardik Pandya: ஐபிஎல் 2026 சீசனில் காயம்.. மே 22ம் தேதி திருமணம்.. புது சர்ச்சையில் சிக்கும் ஹர்திக் பாண்ட்யா?
Hardik Pandya Marriage Rumors: காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது திருமணம் குறித்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு பதிவில், ஹர்திக்கின் திருமணம் வருகின்ற 2026 மே 22ம் தேதி என்றும், தனது காதலியான மஹிகா ஷர்மாவை திருமணம் செய்யப்போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். ஐபிஎல் 2026-ல் (IPL 2026) கேப்டனாகவும் வீரராகவும் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்திறன் சிறப்பாக இல்லை. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி மீண்டும் பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது. முதுகுவலி காரணமாக ஹர்திக் பாண்டியா கடந்த சில போட்டிகளிலும் விளையாடவில்லை. இதற்கிடையில், இந்த நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா திருமணம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா ஷர்மாவை வருகின்ற 2026 மே 22ம் தேதி திருமணம் செய்யப் போகிறார் என்று ஒரு வைரல் பதிவு கூறுகிறது.
ALSO READ: வேறு அணிக்கு செல்கிறாரா ஹர்திக்..? ஷர்துல் தாக்கூர் கொடுத்த விளக்கம்!




ஹர்திக்-மஹிகா திருமணம் மே 22ம் தேதி?
ஹர்திக் பாண்டியாக்கு புதிய காதலியுடன் மே 22 மீண்டும் திருமணம் 💐🥰❤️ pic.twitter.com/WBOyPLvkAI
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) May 16, 2026
காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது திருமணம் குறித்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு பதிவில், ஹர்திக்கின் திருமணம் வருகின்ற 2026 மே 22ம் தேதி என்றும், தனது காதலியான மஹிகா ஷர்மாவை திருமணம் செய்யப்போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூற்றில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று அதாவது மே 15ம் ஹேதி ஹர்திக் பாண்ட்யா திருமணம் குறித்த வதந்திகள் பரவின. X என்ற சமூக வலைதளத்தில் ஒரு பயனர் இந்தச் செய்தியைப் பகிர்ந்து, “ஹர்திக் பாண்ட்யா மற்றும் மஹிகா ஷர்மா வருகின்ற 2026 மே 22ம் தேதி உதய்பூரில் ஒரு தனிப்பட்ட விழாவில் திருமணம் செய்துகொள்கிறார்கள்” என்று எழுதியிருந்தார்.
வைரலான இந்த பதிவின்படி, ஹர்திக் பாண்ட்யா மற்றும் மஹிகா ஷர்மா வருகின்ற மே 22ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்பது உண்மை இல்லை. அதாவது, ஹர்திக் பாண்டியா அல்லது அவரது குழுவினர் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வரவில்லை. எனவே, இது முழுக்க முழுக்க வதந்தி என்று கூறப்பட்டு வருகிறது.
ALSO READ: பிளே ஆஃப் செல்ல ஒரே ஒரு வாய்ப்பு.. பயன்படுத்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்..?
மும்பை இந்தியன்ஸின் மோசமான நிலை
ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் 226 சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 107 ரன்களுடன் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அவரது ஆட்டத்திறனும், அணியின் செயல்பாடும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.